ரோகித் சர்மாவுடன் மோதல் இல்லை: ஒரு நாள் தொடரில் பங்கேற்பேன்- கோஹ்லி

Updated : டிச 15, 2021 | Added : டிச 15, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
மும்பை: இந்திய அணியின் ஒரு நாள் கேப்டன் ரோகித் சர்மாவுடன் எந்த மோதலும் இல்லை என தெரிவித்துள்ள டெஸ்ட் அணி கேப்டன் கோஹ்லி, தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பங்கேற்பேன் என தெரிவித்துள்ளார்.தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட்(டிச.26-ஜன.15), ஒருநாள் தொடரில்(ஜன.19, 21, 23) பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக கோஹ்லி
viratkohli, விராட் கோஹ்லி, ரோகித்சர்மா

மும்பை: இந்திய அணியின் ஒரு நாள் கேப்டன் ரோகித் சர்மாவுடன் எந்த மோதலும் இல்லை என தெரிவித்துள்ள டெஸ்ட் அணி கேப்டன் கோஹ்லி, தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பங்கேற்பேன் என தெரிவித்துள்ளார்.



தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட்(டிச.26-ஜன.15), ஒருநாள் தொடரில்(ஜன.19, 21, 23) பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக கோஹ்லி தொடர்ந்தார். துணைக் கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு தரப்பட்டது. ஒருநாள் தொடருக்கு கோஹ்லிக்கு பதில் ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.



தொடர்ந்து ஒருவர் தலைமையில் மற்றொருவர் விளையாட தயாராக இல்லை என தகவல் வெளியானது. காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா விலகினார். இதற்கு பதிலடியாக ஒரு நாள் தொடரில் இருந்து விலக கோஹ்லி விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.



இந்நிலையில், கோஹ்லி நிருபர்களிடம் கூறியதாவது: தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு தேவை என பி.சி.சி.ஐ., அமைப்பிடம் கேட்கவில்லை. போட்டியில் விளையாட தயாராக உள்ளேன். கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு எப்போதும் நான் தயாராகவே உள்ளேன்.



latest tamil news



எனது கடமைகளில் நான் நேர்மையாக உள்ளேன். டெஸ்ட் அணி தொடர்பான ஆலோசனையின் போது, அணி தேர்வாளர்கள் என்னிடம், ஒரு நாள் போட்டிக்கு நான் கேப்டன் இல்லை என்பதை தெரிவித்தனர். ரோகித் சர்மாவிற்கும் எனக்கும் இடையே எந்த பிரச்னை இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக இதனை திரும்ப திரும்ப சொல்லி களைப்படைந்துவிட்டேன். டுவென்டி -20 அணி கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை.



ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து என்னை நீக்குவதற்கு தேர்வுக்குழுவினர் என்ன காரணத்தை கூறினார்கள் என கேட்கிறீர்கள்.

நிச்சயமாக, ஐசிசி போட்டிகளில் கோப்பை எதையும் வெல்லவில்லை. என்னால் காரணங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த முடிவு சரியா தவறா என்பது பற்றி எவ்வித விவாதமும் கிடையாது. பிசிசிஐ ஒரு முடிவு எடுத்துள்ளது. அது புரிந்துகொள்ளப்பட வேண்டியது. எனக்கு அது புரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-டிச-202105:39:54 IST Report Abuse
முருகன் இந்தியா அணியில் இவரை தவிர மாற்ற அனைத்து வீரர்கள் இடத்தையும் தேவையில்லாமல் மாற்றி மாற்றி அவர்கள் இடத்தை கேள்வி குறி ஆக்கியவர் .
Rate this:
Cancel
ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் ரோஹித் சர்மா / கோஹ்லி இருவரையும் அணியில் இருந்து தூக்கி எறிந்து விட்டு வேறு அரசியல் செய்யாத இருவரை தேர்ந்தெடுங்கள் 18 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அணியின் தலைவராக கே எல் ராகுலை நியமியுங்கள்
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
15-டிச-202114:14:34 IST Report Abuse
J. G. Muthuraj GOOD DECISION, WELL DONE, KOHLI.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X