வேலூரில் நகைக்கடை சுவரில் துளையிட்டு 30 கிலோ தங்க நகைகள் கொள்ளை

Updated : டிச 15, 2021 | Added : டிச 15, 2021 | கருத்துகள் (12) | |
Advertisement
வேலுார்: வேலுார் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுவற்றை துளையிட்டு 30 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.வேலுார் தோட்டப்பாளையத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை உள்ளது. இன்று காலை 9:30 மணிக்கு ஊழியர்கள் கடையை திறந்து உள்ளே சென்றனர். அப்போது, சுவற்றில் துளையிட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தகவல் அறிந்த வேலுார் சரக டி.ஐ.ஜி., பாபு, எஸ்.பி.,
வேலூரில் நகைக்கடை சுவரில் துளையிட்டு 30 கிலோ தங்க நகைகள் கொள்ளை

வேலுார்: வேலுார் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுவற்றை துளையிட்டு 30 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

வேலுார் தோட்டப்பாளையத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை உள்ளது. இன்று காலை 9:30 மணிக்கு ஊழியர்கள் கடையை திறந்து உள்ளே சென்றனர். அப்போது, சுவற்றில் துளையிட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தகவல் அறிந்த வேலுார் சரக டி.ஐ.ஜி., பாபு, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாய் சிம்பா வந்தது. கை ரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் பக்கத்தில் சுற்றுச் சுவர் உள்ளது. அதன் அருகில் கார் பார்க்கிங் உள்ளது. கொள்ளையர்கள் சுற்றுச் சுவருக்கு அருகில், கார் பார்க்கிங் உள்ள இடத்தில் தரையை தோண்டி அதன் வழியாக உள்ளே சென்றனர். அங்கு மாடிக்கு செல்லும் ஏ.சி., பைப்பை பிடித்தபடி மேல் மாடிக்கு சென்றனர். அங்கு மொட்டை மாடியில் ஏ.சி.,க்காக போடப்பட்டுள்ள ஹோசை உடைத்து மூன்றாவது மாடியில் உள்ள வைர நகை பிரிவுக்கு சென்றுள்ளனர். அங்குள்ள மெயின் சி.சி.டி.வி., கேமராவில் சென்ட்டுக்கு பயன்படுத்தும் வாசனை திரவத்தை ஸ்பிரே அடித்ததால் கேமரா வேலை செய்யவில்லை.


latest tamil news


பின் மூன்றாவது மாடியில் உள்ள வைர நகை, இரண்டாவது மாடியில் உள்ள தங்கம் நகை, முதலாவது மாடியில் உள்ள வெள்ளி நகை பிரிவுக்கு வந்து நகை, வைரங்கள் கொள்ளையடித்துக் கொண்டு தாங்கள் வந்த வழியாகவே திரும்பிச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை 1:00 மணி முதல் 3:00 மணிக்குள் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. சுவற்றை துளைப்போட சத்தம் வராத பேட்டரி ரம்பத்தை பயன்படுத்தியுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவருகிறது. மற்ற நகைகள் குறித்து விசாரணை நடக்கிறது. எப்போதும் வியாபாரம் முடிந்து கடையை மூடும் போது, ஷோகேசில் உள்ள நகைகளை அங்குள்ள லாக்கரில் வைத்து பூட்டி விட்டு செல்வது வழக்கம். ஆனால் நேற்று அவ்வாறு செய்யவில்லை.

காரணம் கேட்டதற்கு, கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகை வருவதால் கடை திறந்ததும் வாடிக்கையாளர்கள் வருவதால் லாக்கரில் வைக்கவில்லை என கடை ஊழியர்கள் கூறுகின்றனர். கை தேர்ந்த நகை கடை கொள்ளையர்கள் 10 பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். இந்த கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் அல்லது முன்னாள் ஊழியர் துணை இல்லாமல் இந்த கொள்ளை நடந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் கடை ஊழியர்கள் மற்றும் சம்பவம் நடந்த போது இங்கு பணியாற்றிய தனியார் செக்யூரிட்டிக்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்த கடையில் மூடிய பிறகு யாராவது நுழைந்தாலும், திருடினாலும், கடை திறந்திருக்கும் போது நகை வாங்க வருவது போல திருடர்கள் நுழைந்தாலும் அவர்களை இங்குள்ள கேமிரா காட்டிக் கொடுத்து விடும். இதற்காக இந்த கடையில் 63 கேமராக்கள் உள்ளன. மேலும் கேரளா மாநிலம், கோட்டையம், எர்ணாகுளம், சென்னை போன்ற இடங்களில் இருந்த கடையை கண்காணிக்கும் வசதியும் உள்ளது. இதை மீறி கொள்ளை நடந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
16-டிச-202103:13:59 IST Report Abuse
மிளிர்வன் வேலூரில் எது நடந்தாலும் ஒரு மார்க்கமாகத்தான் நடக்கும்.. அன்பு மார்க்கத்தவர்கள் அமைதி மார்க்கத்தை அனுசரித்து போவது இன்றைய ஆட்சியில் எழுதப்படாத சட்டம்.. விவசாயி போராட்டம் போல எல்லாம் வேலூர்'ல முயற்சி பண்ணாதீங்கப்பா.. அப்புறம் ......... ஹி..ஹி..
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
15-டிச-202121:05:03 IST Report Abuse
Tamilan இப்படி படிக்காதவர்கள் செய்கிறார்கள் என்றல்ல. e முறையில் படித்தவர்கள் இந்தியாவில் மட்டும் வருடம்தோறும் ATM, கிரெடிட் கார்டு மூலம் இரண்டு லட்சம் கோடிகள் வரை கொள்ளையடித்துள்ளார்கள் என்பதை அரசியல் சட்ட அரசுகள் கண்டுகொள்வதேயில்லை. அரசுகளால் ஒரு பைசாவைக்கூட மீட்க முடியவில்லை. போக சட்டபூர்வமாக கார்போரேட்டுகள், சந்தையில் உள்ளவர்கள் அடிக்கும் கொள்ளை வருடத்திற்கு பல லச்சம் கோடிகள். அம்பானி கம்பனி மட்டும் மோடியின் பத்தாண்டுகளில் பத்துலட்சம் கோடி வரை கொள்ளையடித்துள்ளது. இதுபோல் எண்ணற்ற கம்பனிகள். இப்படியாக மோடியின் பத்தாண்டு ஆட்சியில் கோடிக்கணக்கான கோடிகள் மக்கள் பணம் கொள்ளையர்களின் கைக்கு சென்றுவிட்டது. இவையனைத்தும் மக்களின் சொந்த பணம். மோடி அரசோ இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதுடன், இப்படிப்பட்ட கொள்ளையர்களுக்கு மகுடம் தூக்கிக்கொண்டு காலத்தை கடத்துகிறது . தங்களின் எடுபிடிகளான நிர்மலா சீதாராமன் , சக்திகாந்த தாஸ் போன்றோரை வைத்து ரீல் ஒட்டிக்கொண்டு மாயாஜால விதைகள் காட்டிக்கொண்டுள்ளது . இவர்கள் கொள்ளையடிப்பதற்காகவே சட்டங்கள் போட்டுக்கொண்டிருக்கிறது . இப்படி ஒரு அரசு நாட்டுக்கு தேவையா ?. அரசியல் சட்டத்தை அடியோடு ஒழித்தால்தான் நாடு முன்னேறும் .
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
15-டிச-202120:19:26 IST Report Abuse
 rajan மக்களிடம் இருந்து கொள்ளை அடிக்கும் நகைக்கடைகளில் கொள்ளையர்களின் கைவரிசை என்று செய்தி போடவும். வேஸ்டேஜ் மேக்கிங் சார்ஜ் அது இது என்று தலையில் மிளகாய் அரைத்து ஒரு சவரனுக்கு பத்தாயிரம் வரை லாபம் பார்க்கிறார்கள். ஆங்காங்கே புதியதாக கிளைகள் திறக்கிறார்கள். இப்படி கொள்ளை அடித்தால்தானே புதிய கடைகள் திறக்க முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X