வேலூரில் நகைக்கடை சுவரில் துளையிட்டு 30 கிலோ தங்க நகைகள் கொள்ளை| Dinamalar

வேலூரில் நகைக்கடை சுவரில் துளையிட்டு 30 கிலோ தங்க நகைகள் கொள்ளை

Updated : டிச 15, 2021 | Added : டிச 15, 2021 | கருத்துகள் (12) | |
வேலுார்: வேலுார் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுவற்றை துளையிட்டு 30 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.வேலுார் தோட்டப்பாளையத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை உள்ளது. இன்று காலை 9:30 மணிக்கு ஊழியர்கள் கடையை திறந்து உள்ளே சென்றனர். அப்போது, சுவற்றில் துளையிட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தகவல் அறிந்த வேலுார் சரக டி.ஐ.ஜி., பாபு, எஸ்.பி.,
வேலூரில் நகைக்கடை சுவரில் துளையிட்டு 30 கிலோ தங்க நகைகள் கொள்ளை

வேலுார்: வேலுார் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுவற்றை துளையிட்டு 30 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.



வேலுார் தோட்டப்பாளையத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை உள்ளது. இன்று காலை 9:30 மணிக்கு ஊழியர்கள் கடையை திறந்து உள்ளே சென்றனர். அப்போது, சுவற்றில் துளையிட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தகவல் அறிந்த வேலுார் சரக டி.ஐ.ஜி., பாபு, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாய் சிம்பா வந்தது. கை ரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.



இது குறித்து போலீசார் கூறியதாவது: ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் பக்கத்தில் சுற்றுச் சுவர் உள்ளது. அதன் அருகில் கார் பார்க்கிங் உள்ளது. கொள்ளையர்கள் சுற்றுச் சுவருக்கு அருகில், கார் பார்க்கிங் உள்ள இடத்தில் தரையை தோண்டி அதன் வழியாக உள்ளே சென்றனர். அங்கு மாடிக்கு செல்லும் ஏ.சி., பைப்பை பிடித்தபடி மேல் மாடிக்கு சென்றனர். அங்கு மொட்டை மாடியில் ஏ.சி.,க்காக போடப்பட்டுள்ள ஹோசை உடைத்து மூன்றாவது மாடியில் உள்ள வைர நகை பிரிவுக்கு சென்றுள்ளனர். அங்குள்ள மெயின் சி.சி.டி.வி., கேமராவில் சென்ட்டுக்கு பயன்படுத்தும் வாசனை திரவத்தை ஸ்பிரே அடித்ததால் கேமரா வேலை செய்யவில்லை.



latest tamil news


பின் மூன்றாவது மாடியில் உள்ள வைர நகை, இரண்டாவது மாடியில் உள்ள தங்கம் நகை, முதலாவது மாடியில் உள்ள வெள்ளி நகை பிரிவுக்கு வந்து நகை, வைரங்கள் கொள்ளையடித்துக் கொண்டு தாங்கள் வந்த வழியாகவே திரும்பிச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை 1:00 மணி முதல் 3:00 மணிக்குள் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. சுவற்றை துளைப்போட சத்தம் வராத பேட்டரி ரம்பத்தை பயன்படுத்தியுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவருகிறது. மற்ற நகைகள் குறித்து விசாரணை நடக்கிறது. எப்போதும் வியாபாரம் முடிந்து கடையை மூடும் போது, ஷோகேசில் உள்ள நகைகளை அங்குள்ள லாக்கரில் வைத்து பூட்டி விட்டு செல்வது வழக்கம். ஆனால் நேற்று அவ்வாறு செய்யவில்லை.


காரணம் கேட்டதற்கு, கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகை வருவதால் கடை திறந்ததும் வாடிக்கையாளர்கள் வருவதால் லாக்கரில் வைக்கவில்லை என கடை ஊழியர்கள் கூறுகின்றனர். கை தேர்ந்த நகை கடை கொள்ளையர்கள் 10 பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். இந்த கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் அல்லது முன்னாள் ஊழியர் துணை இல்லாமல் இந்த கொள்ளை நடந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் கடை ஊழியர்கள் மற்றும் சம்பவம் நடந்த போது இங்கு பணியாற்றிய தனியார் செக்யூரிட்டிக்களிடம் விசாரணை நடந்து வருகிறது.



இந்த கடையில் மூடிய பிறகு யாராவது நுழைந்தாலும், திருடினாலும், கடை திறந்திருக்கும் போது நகை வாங்க வருவது போல திருடர்கள் நுழைந்தாலும் அவர்களை இங்குள்ள கேமிரா காட்டிக் கொடுத்து விடும். இதற்காக இந்த கடையில் 63 கேமராக்கள் உள்ளன. மேலும் கேரளா மாநிலம், கோட்டையம், எர்ணாகுளம், சென்னை போன்ற இடங்களில் இருந்த கடையை கண்காணிக்கும் வசதியும் உள்ளது. இதை மீறி கொள்ளை நடந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X