சீன தடுப்பூசி ஒமைக்ரானை கட்டுப்படுத்தாது: ஹாங்காங் பல்கலை தகவல்!

Updated : டிச 15, 2021 | Added : டிச 15, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
பெய்ஜிங்: கோவிட் வைரஸை தடுக்க சீனாவின் 'சினோவேக் பயோடெக்' நிறுவனம் தயாரித்த 'கொரோனாவேக்' தடுப்பூசியை கோடிக்கணக்கான மக்கள் உலகில் போட்டுள்ளனர். அத்தடுப்பூசி தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக போதுமான நோய் எதிர்ப்பாற்றலை உண்டாக்கவில்லை என ஹாங்காங் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். கோவிட் பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வர விஞ்ஞானிகள்,

பெய்ஜிங்: கோவிட் வைரஸை தடுக்க சீனாவின் 'சினோவேக் பயோடெக்' நிறுவனம் தயாரித்த 'கொரோனாவேக்' தடுப்பூசியை கோடிக்கணக்கான மக்கள் உலகில் போட்டுள்ளனர். அத்தடுப்பூசி தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக போதுமான நோய் எதிர்ப்பாற்றலை உண்டாக்கவில்லை என ஹாங்காங் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.



latest tamil news


கோவிட் பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வர விஞ்ஞானிகள், மருத்துவர்கள், உலக நாடுகளின் அரசாங்கங்கள் போராடி வரும் சூழலில் ஒமைக்ரான் எனும் புதிய உருமாறிய கோவிட் வகை பரவத் தொடங்கியுள்ளது. அதைப் பற்றிய ஆய்வுகள் பல்வேறு நாடுகளிலும் நடக்கின்றன.

ஜப்பானின் சமீபத்திய ஆய்வு ஒமைக்ரான் வகையானது, டெல்டா வரஸை விட நான்கு மடங்கு வேகமாக பரவக்கூடியது என கூறியுள்ளது. 2 தடுப்பூசி போட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆனவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளுமாறு அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகள் அறிவுறுத்துகின்றன.


இந்நிலையில் ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய்கள் பிரிவின் பேராசிரியர் குவாக் யுங் யுயென் தலைமையில் 50 பேர் கொண்ட குழுவினரை இரு பிரிவாக பிரித்து ஆய்வு செய்தனர். முதல் 25 பேர் சீனாவின் சினோவேக் தடுப்பூசி பெற்றவர்கள். மற்றொரு 25 பேர் பைசர் தடுப்பூசி பெற்றவர்கள். அதில் சினோவேக் பெற்றவர்களின் ரத்த சீரத்தில் ஒமைக்ரானை கட்டுப்படுத்த போதுமான ஆன்டிபாடிகள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. பைசர் தடுப்பூசி பெற்றவர்களில் 5 பேரின் உடலில், அதாவது 25% பேரிடம் ஒமைக்ரானை சமாளிக்கும் ஆன்டிபாடிகள் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.


latest tamil news



இருப்பினும் இது ஆரம்பக்கட்ட ஆய்வுகள் தான் என ஆய்வுக் குழுவினர் அறிவித்துள்ளனர். நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆயுதமாக கருதப்படும் டி-செல்கள் ஒமைக்ரானுக்கு எதிராக எவ்வாறு செயல்புரிகின்றன என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இதுவரை சீனாவின் தடுப்பூசி அந்நாட்டிலும், பல்வேறு உலக நாடுகளிலும் 230 கோடி டோஸ்கள் செலுத்தப் பட்டு உள்ளன. இதனால் அவர்கள் முகக்கவசம் உள்ளிட்ட பழைய வழிமுறைகளையே மீண்டும் தீவிரமாக பின்பற்ற வேண்டியிருக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-டிச-202104:32:52 IST Report Abuse
J.V. Iyer ஓ.. மை.. காட் ஒ..மை..க்ரான்
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
15-டிச-202123:17:32 IST Report Abuse
Samathuvan Nobody can stop China's growth even India.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
15-டிச-202120:49:43 IST Report Abuse
RajanRajan ஓ அப்போ ஒமிகிரான் சீனாவை அழிச்சுடுமோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X