வேலூர் அரசு மருத்துவமனையில் மின் ஒயர்கள் எரிந்ததால் நோயாளிகள் ஓட்டம்

Added : டிச 15, 2021 | |
Advertisement
வேலுார்:வேலுார் அரசு மருத்துவமனையில், மின் ஒயர்கள் எரிந்ததால் நோயாளிகள் ஓட்டம் பிடித்தனர்.வேலுார் அடுக்கும்பாறையில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இங்கு புறநோயாளிகள் பிரிவு கட்டடத்தில் இன்று காலை ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக காத்திருந்தனர். காலை 11:00 அங்கிருந்த மின் ஒயர்கள் திடிரென தீப்பிடித்து எரிந்தன.சில நிமிடங்களில் அந்த கட்டடத்தில் இருந்த மற்ற
 வேலூர் அரசு மருத்துவமனையில் மின் ஒயர்கள் எரிந்ததால் நோயாளிகள் ஓட்டம்

வேலுார்:வேலுார் அரசு மருத்துவமனையில், மின் ஒயர்கள் எரிந்ததால் நோயாளிகள் ஓட்டம் பிடித்தனர்.

வேலுார் அடுக்கும்பாறையில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இங்கு புறநோயாளிகள் பிரிவு கட்டடத்தில் இன்று காலை ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக காத்திருந்தனர். காலை 11:00 அங்கிருந்த மின் ஒயர்கள் திடிரென தீப்பிடித்து எரிந்தன.
சில நிமிடங்களில் அந்த கட்டடத்தில் இருந்த மற்ற இடங்களுக்கும் பரவி அங்கிருந்த மின் ஒயர்களும் எரிந்தது புகை மண்டலமாகியது. இதனால் நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். புகையினால் பலர் மயங்கி விழுந்தனர். உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
மருத்துவமனை ஊழியர்கள் தீயணைக்கும் கருவியை கொண்டு தீயை அணைத்தனர். மயக்கம் போட்டு விழுந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் புற நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மின் தடையால் அங்கிருந்த கம்ப்யூட்டர்கள் இயங்காததால், நோயாளிகள் விவரம் தெரியாததால், அங்கிருந்த நோட்டில் எழுதப்பட்டு சீட்டு வழங்கப்பட்டது. இதனால் அங்கு வாக்கு வாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளை சமாதானப்படுத்தினர். தொடர் மழையினால் புற நோயாளிகள் பிரிவில் உள்ள மின் ஒயரில் தண்ணீர் கசிந்து மங்கி மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மின்சார ஒயர்கள் சீரமைக்கப் பட்டது. இதனால் புறநோயாளிகள் பிரிவில் பரபரப்பு ஏற்பட்டது

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X