தமிழகத்தில் நுழைந்தது 'ஒமைக்ரான்' ஒருவருக்கு பாதிப்பு; 7 பேர் மாதிரி் மறு ஆய்வு

Updated : டிச 16, 2021 | Added : டிச 15, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை : ''நைஜீரியா நாட்டில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு 'ஒமைக்ரான்' பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.''மேலும், ஏழு பேருக்கு மரபியல் மாற்றம் கண்டறியப்பட்டதால், ஒமைக்ரான் பாதிப்பை உறுதி செய்ய, மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை, ராணிமேரி கல்லுாரி மாணவியருக்கு தடுப்பூசி சிறப்பு முகாம்
தமிழகத்தில், ஒருவருக்கு, ஒமைக்ரான் தொற்று,உறுதி, அமைச்சர்சென்னை : ''நைஜீரியா நாட்டில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு 'ஒமைக்ரான்' பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.''மேலும், ஏழு பேருக்கு மரபியல் மாற்றம் கண்டறியப்பட்டதால், ஒமைக்ரான் பாதிப்பை உறுதி செய்ய, மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை, ராணிமேரி கல்லுாரி மாணவியருக்கு தடுப்பூசி சிறப்பு முகாம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:மாணவியருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், இங்கு படிக்கும், 5,500 மாணவியர், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுகாதார துாதர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

உலகை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தமிழகத்தில் நுழைந்துள்ளது. நைஜீரியாவில் இருந்து தமிழகம் திரும்பிய நபருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். அவருக்கு கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த மேலும் 7 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இருக்கக்கூடும் என்பதால் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


latest tamil newsஇவர்களுக்கு, மாநகராட்சியின் சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த மாணவியர், தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மக்கள் மற்றும் உறவினர்களுக்கு, கொரோனா பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவர். நைஜீரியா நாட்டில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு, ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டுள்ளார்.அவரது குடும்பத்தினர் ஆறு பேருக்கும், அவருடன் விமானத்தில் பயணித்த ஒருவருக்கும் மரபியல் மாற்றம் கண்டறியப்பட்டுள்ளது. இது ஒமைக்ரான் வகையா என்பதை கண்டறிய, பெங்களூரு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில், 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களது மாதிரிகளும் பெங்களூரு அனுப்பப்பட்டுள்ளன.உலக சுகாதார அமைப்பு, மரபியல் மாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று மிக வேகமாக பரவக்கூடியது என எச்சரித்து
உள்ளது.

இந்த தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முக கவசம் அணிவதும், இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதும் மட்டுமே நிரந்தர தீர்வு. மூன்றாம் தவணை தடுப்பூசி மற்றும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து, மத்திய அரசு முடிவு எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-டிச-202106:32:05 IST Report Abuse
அப்புசாமி மறு ஆய்வு, சீராய்வுன்னு ஏதாவது செஞ்சு அவிங்களுக்கு ஓமைக்ரான் இல்லேன்னு முடிவுகள் வரும் வரை செஞ்சுக்கிட்டே இருக்கணும்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
15-டிச-202123:42:33 IST Report Abuse
Natarajan Ramanathan Nigeria is a very dangerous country full of criminals. Why can't we ban all diplomatic relations with that country?
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
15-டிச-202123:37:56 IST Report Abuse
Mohan மரபணு சோதனை செய்ய பெங்களூருக்கு அனுப்பி வைத்திருக்கிறீர்கள். ஏன், அந்த சோதனை செய்ய இங்க முயற்சி செய்யலாமே.அந்த திட்டத்துக்கெல்லாம் உங்களிடம் பணம் இருக்காதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X