கொரோனா கவச உடை 6 லட்சம் தேக்கம்

Added : டிச 15, 2021 | |
Advertisement
சென்னை:ஆறு லட்சம் கொரோனா தடுப்பு கவச உடைகள் பயன்படுத்தப்படாமல் தேங்கி உள்ளன.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர், ஒருமுறை அணிந்து அப்புறப்படுத்தக் கூடிய வகையில், 'பி.பி.இ., கிட்' எனப்படும் கவச உடையை பயன்படுத்தினர். கொரோனாவால் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்தவர்களுக்கும், இந்த கவச உடை வழங்கப்பட்டது.

சென்னை:ஆறு லட்சம் கொரோனா தடுப்பு கவச உடைகள் பயன்படுத்தப்படாமல் தேங்கி உள்ளன.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர், ஒருமுறை அணிந்து அப்புறப்படுத்தக் கூடிய வகையில், 'பி.பி.இ., கிட்' எனப்படும் கவச உடையை பயன்படுத்தினர்.
கொரோனாவால் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்தவர்களுக்கும், இந்த கவச உடை வழங்கப்பட்டது. இதற்காக, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் வாயிலாக, கொரோனா தடுப்பு கவச உடைகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டது.
ஒரு கவச உடை 220 ரூபாய்க்கு வாங்கப்பட்டது. கொரோனாவுடன் வாழ பழகி விட்டதால், மருத்துவர்கள், செவிலியர்கள் பலரும், தற்போது கவச உடை அணிவதில்லை. முகக்கவசம் மட்டுமே அணிந்து வருகின்றனர். எனவே, மருத்துவ பணிகள் கழகத்திற்கு சொந்தமான குடோன்களில், ஆறு லட்சம் கவச உடைகள் தேக்கம் அடைந்துள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு மையங்கள் மற்றும் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, மருத்துவ பணிகள் கழகத்திடம் இருந்து கவச உடைகள், முகக்கவசம் உள்ளிட்டவை வாங்கப்பட உள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஓட்டளிப்பதற்காக, தேங்கியுள்ள கவச உடைகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X