ஐ.மு., கூட்டணிக்கு ஸ்டாலின் தலைவர்?

Updated : டிச 17, 2021 | Added : டிச 15, 2021 | கருத்துகள் (24) | |
Advertisement
லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு, சுழற்சி முறையில் இரண்டாண்டுக்கு ஒருமுறை முதல்வர் ஸ்டாலின், தேசியவாத காங்., தலைவர் சரத்பவார், திரிணமுல் காங்., தலைவர் மம்தா, காங்., தலைவர் சோனியா ஆகியோரை தலைவராக அமர்த்தி, பெருங்கூட்டணி ஏற்படுத்தலாம் என்ற முயற்சியில், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்
ஐ.மு., கூட்டணி, ஸ்டாலின் தலைவர்?

லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு, சுழற்சி முறையில் இரண்டாண்டுக்கு ஒருமுறை முதல்வர் ஸ்டாலின், தேசியவாத காங்., தலைவர் சரத்பவார், திரிணமுல் காங்., தலைவர் மம்தா, காங்., தலைவர் சோனியா ஆகியோரை தலைவராக அமர்த்தி, பெருங்கூட்டணி ஏற்படுத்தலாம் என்ற முயற்சியில், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்


ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.'தேசிய அளவில் பா.ஜ.,வை எதிர்கொள்ள வலுவான எதிர்க்கட்சி இல்லை. இதனால், 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது' என, சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்திருந்தார்.

தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஓட்டு வங்கி ஒட்டுமொத்தமாக கிடைக்காமல் சிதறி விடுவதால், பா.ஜ., சுலபமாக வெற்றி பெறுகிறது என பிரசாந்த் கிஷோர் கருதுகிறார். இதனால், மாநில வாரியாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, வலுவான கூட்டணி வியூகம் அமைக்கும் முயற்சியில், அவர் ஈடுபட்டுள்ளார்.
மாநில வாரியாக காங்கிரஸ் பலவீனம் அடைந்து வருகிறது. பிரதமர் வேட்பாளராக ராகுல் தலைமையை ஏற்க, பல மாநில கட்சிகளும் தயக்கம் காட்டுகின்றன. இதனால், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் கொண்ட ஒரு புதிய அணியை உருவாக்கும் வகையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரை ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார். அவர்களை தொடர்ந்து, தென் மாநிலங்களில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரையும் சந்தித்து பேச, பிரசாந்த் கிஷோர்திட்டமிட்டுள்ளார்.


'ஐ.மு., கூட்டணி எங்கே இருக்கிறது' என மம்தா எழுப்பிய கேள்வியால், சமீபத்தில் சோனியா தலைமையில் ஐ.மு., கூட்டணி கட்சிகளின் கூட்டம் டில்லியில் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில், தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு போன்ற கட்சிகள் பங்கேற்றன.

ஆனால், மாநில அளவில் வலுவாக உள்ள அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் போன்ற கட்சிகள் பங்கேற்கவில்லை. இதனால், சோனியா தலைமையிலான ஐ.மு., கூட்டணி திவாலாகி விட்டது என பா.ஜ., தரப்பில் விமர்சிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஐ.மு., கூட்டணியின் புதிய தலைவராக மம்தாவை தேர்ந்தெடுத்தால், காங்கிரஸ் தலைமையை விரும்பாத மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து, பா.ஜ.,வை எதிர்கொள்ளும் வலுவான அணியை உருவாக்க முடியும் என பிரசாந்த் கிஷோர் கருதுகிறார்.
அவரது திட்டத்திற்கு சோனியா இசைவு தெரிவிக்கவில்லை. ஐ.மு., கூட்டணியின் தலைமையை விட்டுக் கொடுக்கவும் சோனியா விரும்பவில்லை.

எனவே, 'சோனியாவிடம், முதல்வர் ஸ்டாலின் சமரச பேச்சு நடத்தி, மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். ஐ.மு., கூட்டணி தலைவராக ஒரு தலைவரே நீடிக்காமல், ஸ்டாலின், சோனியா, மம்தா, ஆகியோர் தலா இரண்டு ஆண்டுகள் பிரித்து செயல்படலாம்' என்ற ஆலோசனையை பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
எனவே, சோனியா, மம்தா இருவரையும் சந்தித்து பேசி, ஐ.மு., கூட்டணிக்கு தலைவராகும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபடுவாரா என்ற கேள்வி, தேசிய அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.- புது டில்லி நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
17-டிச-202106:42:27 IST Report Abuse
meenakshisundaram முதலில் 'சட்டை காலர் ஐ சரியா தச்சுக்க சொல்லுங்க ,ரொம்பவும் 'தூக்கி 'வட்டுக்க வோணாம்
Rate this:
Cancel
16-டிச-202123:02:44 IST Report Abuse
ஆரூர் ரங் இப்படியே உசுப்பி விட்டு உசுப்பி விட்டு பின்னால ரணகளமாக ஆக்கப்😇😇 போறாங்க. ஜாக்கிரதை
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
16-டிச-202121:33:55 IST Report Abuse
a natanasabapathy உருப்படாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X