'டுவிட்டர்' இந்தியா 'மாஜி' தலைவர் மணிஷ் மகேஸ்வரி ராஜினாமா

Updated : டிச 15, 2021 | Added : டிச 15, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி :'டுவிட்டர் இந்தியா' நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மணிஷ் மகேஸ்வரி, கல்வி பணியில் ஈடுபட உள்ளதை அடுத்து, 'டுவிட்டர்' நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.அமெரிக்காவை சேர்ந்த, 'டுவிட்டர்' சமூக வலைதளத்திற்கு இந்தியாவில் மட்டும் 1.75 கோடி பயனாளர்கள் உள்ளனர். இந்த நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கு மணிஷ் மகேஸ்வரி என்பவர் தலைமை வகித்து வந்தார்.சமூக
 'டுவிட்டர்' இந்தியா 'மாஜி' தலைவர் மணிஷ் மகேஸ்வரி ராஜினாமா


புதுடில்லி :'டுவிட்டர் இந்தியா' நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மணிஷ் மகேஸ்வரி, கல்வி பணியில் ஈடுபட உள்ளதை அடுத்து, 'டுவிட்டர்' நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.அமெரிக்காவை சேர்ந்த, 'டுவிட்டர்' சமூக வலைதளத்திற்கு இந்தியாவில் மட்டும் 1.75 கோடி பயனாளர்கள் உள்ளனர். இந்த நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கு மணிஷ் மகேஸ்வரி என்பவர் தலைமை வகித்து வந்தார்.
சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு சட்ட திட்டங்களை வகுத்ததை அடுத்து, டுவிட்டர் இந்தியா நிறுவனம் பல்வேறு சர்ச்சையில் சிக்கியது.
அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் மணிஷ் மகேஸ்வரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


latest tamil news



இந்த நிலையில், மணிஷ் மகேஸ்வரி கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். வருவாய் திட்டமிடல் மற்றும் நிர்வாக பிரிவின் மூத்த இயக்குனராக அவர் நியமிக்கப்பட்டார்.அமெரிக்காவில் பணியாற்றி வந்த மணிஷ் மகேஸ்வரி, தற்போது டுவிட்டர் நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றிய தனய் பிரதாப் உடன் இணைந்து, கல்வித்துறையில் புதிய நிறுவனத்தை துவக்க உள்ளதாக
அறிவித்துள்ளார்.

இது குறித்து மணிஷ் மகேஸ்வரி கூறியதாவது:கல்வித்துறை என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. இந்தியாவின் நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த நான், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே கல்வி கற்றல் பணியில் என்னை ஈடுபடுத்தி வந்தேன். அதில் கிடைத்த வருவாயை வைத்து என் கல்வி கட்டணத்தை செலுத்தி
வந்தேன்.இப்போது என் மனதுக்கு விருப்பமான பணியை மீண்டும் செய்ய வாய்ப்பு அமைந்துள்ளது. நாங்கள் துவக்கியுள்ள இந்த புதிய கல்வி நிறுவனத்துக்கு, 'மெட்டாவர்சிட்டி' என பெயரிட்டுஉள்ளோம்.இதில், மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தயார் செய்யும் வகையிலான கல்வி அளிக்கப்படும். இந்த பயிற்சி முழுக்க முழுக்க, 'ஆன்லைன்' வாயிலாக அளிக்க
திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-டிச-202104:52:11 IST Report Abuse
J.V. Iyer அண்மையில் பிரதமர் அவர்களின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கும் 'டுவிட்டர்' இந்தியா 'மாஜி' தலைவர் மணிஷ் மகேஸ்வரி ராஜினாமாவுக்கும்... முடிச்சி போடுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X