சமுதாயக்கூடத்தில் கிறிஸ்துமஸ் விழா| Dinamalar

சமுதாயக்கூடத்தில் கிறிஸ்துமஸ் விழா

Added : டிச 16, 2021 | |
மதுரை : கன்னியாகுமரி மாவட்டம் நெடியன்கோடு தேவதாசன் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:நெடியன்கோடுவில் அரசு அனுமதியுடன் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. வழிபாடு, கூட்டம், கருத்தரங்கு நடத்துகிறோம். அங்கு டிச.,24 முதல் டிச.,25 வரை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட அனுமதி கோரி திருவட்டார் போலீசில் மனு அளித்தேன். சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகக்கூறி

மதுரை : கன்னியாகுமரி மாவட்டம் நெடியன்கோடு தேவதாசன் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:நெடியன்கோடுவில் அரசு அனுமதியுடன் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. வழிபாடு, கூட்டம், கருத்தரங்கு நடத்துகிறோம்.

அங்கு டிச.,24 முதல் டிச.,25 வரை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட அனுமதி கோரி திருவட்டார் போலீசில் மனு அளித்தேன். சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகக்கூறி நிராகரித்தனர். இதில் விதிமீறல் உள்ளது. அங்கு யாருக்கும் இடையூறின்றி பல ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் விழா நடத்தினோம்.

சமுதாயக்கூடத்தில் கிறிஸ்துமஸ் விழா நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: கட்டுமானம் மேற்கொள்வதற்கு முன் மதம் மற்றும் வழிபாட்டு பயன்பாட்டிற்குரிய கட்டட அனுமதியை பெறவில்லை. அதை மதரீதியாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X