உலகின் போற்றுதலுக்கு உரியோர்: பிரதமர் மோடிக்கு 8ம் இடம்

Updated : டிச 16, 2021 | Added : டிச 16, 2021 | கருத்துகள் (61) | |
Advertisement
லண்டன் : லண்டனில் செயல்படும் இணைய அடிப்படையிலான ஆய்வு நிறுவனம் வெளியிட்ட, 2021ம் ஆண்டிற்கான உலகின் போற்றுதலுக்கு உரியோர் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி 8ம் இடத்தைப் பிடித்துள்ளார்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இணைய அடிப்படையிலான ஆய்வு நிறுவனம் யுகோவ். ஐரோப்பா மட்டுமின்றி வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும்
Most Admired Man, PM Modi, Narendra Modi, நரேந்திர மோடி,மோடி

லண்டன் : லண்டனில் செயல்படும் இணைய அடிப்படையிலான ஆய்வு நிறுவனம் வெளியிட்ட, 2021ம் ஆண்டிற்கான உலகின் போற்றுதலுக்கு உரியோர் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி 8ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இணைய அடிப்படையிலான ஆய்வு நிறுவனம் யுகோவ். ஐரோப்பா மட்டுமின்றி வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவிலும் இந்நிறுவனம் செயல்பாட்டில் உள்ளது.


latest tamil news



இந்நிறுவனம் சார்பில், 2021ம் ஆண்டிற்கான உலகின் மிகவும் போற்றுதலுக்குரிய ஆண்கள் மற்றும் பெண்கள் பட்டியல் நேற்று வெளியானது. இதில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா முதலிடத்தில் உள்ளார். 'மைக்ரோசாப்ட்' நிறுவன அதிபர் பில் கேட்ஸ், சீன அதிபர் ஷி ஜிங்பிங் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

இப்பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்டோரை பின்னுக்குத்தள்ளி பிரதமர் நரேந்திர மோடி 8ம் இடத்தைப் பிடித்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் ஆகியோர் முதல் 20 இடங்களுக்குள் வந்துள்ளனர்.


latest tamil news



அதேபோல் பெருமைக்குரிய பெண்கள் பட்டியலில் மூன்றாம் முறையாக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க நடிகை ஏஞ்சலினா ஜூலி, பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். பட்டியலில் 10ம் இடத்தை இந்தியாவை சேர்ந்த நடிகையும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ரா பெற்றுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-டிச-202102:42:59 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் Don't repeat your comments ....
Rate this:
Cancel
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
17-டிச-202122:43:44 IST Report Abuse
சாண்டில்யன் இதுபோல ஆயிரம் லிஸ்டுங்க இருக்கு PERMUTATION AND COMBINATION போல
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
17-டிச-202110:35:52 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ரொம்ப கரெக்ட்டு.. ஒண்ணுக்கும் பிரயோஜனமில்லாத பட்டியல் ஒண்ணு போடுங்க.. முதல் இடம் அவருக்கு தான்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X