சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பறந்து பறந்து துடைக்கும் 'ட்ரோன்'!

Added : டிச 16, 2021
Advertisement
சூரிய மின் பலகைகளுக்கு எதிரி துாசி தான். அவை பெரும்பாலும் கட்டடங்களுக்கு மேலே அல்லது ஆளில்லாத சமவெளிகளில் அமைகின்றன. அங்கு துாசி படியும் சூழல் அதிகம். துாசி படிந்தால், சூரிய ஒளியிலிருந்து தயாரிக்கும் மின்சாரத்தின் அளவு 24 சதவீதம் வரை குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதனால் சூரிய மின் பலகையை வாரத்திற்கு ஒரு முறையாவது துடைக்க வேண்டியுள்ளது. ஆனால், சூரிய ஒளிப்
 பறந்து பறந்து துடைக்கும் 'ட்ரோன்'!

சூரிய மின் பலகைகளுக்கு எதிரி துாசி தான். அவை பெரும்பாலும் கட்டடங்களுக்கு மேலே அல்லது ஆளில்லாத சமவெளிகளில் அமைகின்றன. அங்கு துாசி படியும் சூழல் அதிகம். துாசி படிந்தால், சூரிய ஒளியிலிருந்து தயாரிக்கும் மின்சாரத்தின் அளவு 24 சதவீதம் வரை குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனால் சூரிய மின் பலகையை வாரத்திற்கு ஒரு முறையாவது துடைக்க வேண்டியுள்ளது. ஆனால், சூரிய ஒளிப் பண்ணைகளில் ஆட்களை வைத்து சுத்தப்படுத்துவது கட்டுபடியாகாது. இந்த சவாலுக்கு, இஸ்ரேலைச் சேர்ந்த சோலார் 'ட்ரோன்' மற்றும் 'ஏர்ரோபாடிக்ஸ்' ஆகியவை கூட்டாக ஒரு தீர்வை உருவாக்கியுள்ளன.

இந்த தொழில்நுட்பம் ஒரு தானோட்டி. நான்கு சுழல் விசிறிகள் கொண்ட ஒரு ட்ரோனில், திரவத் தொட்டி ஒன்றை பொருத்தியுள்ளனர். துாசி தும்புகளை சூரிய மின் பலகைகள் மீதிருந்து துப்புரவாக அகற்ற உதவும் திரவம் அந்த சிறு தொட்டியில் இருக்கும். ட்ரோன் ஒது ஆளுயர பெட்டி போன்ற அறையின் கூரையைத் திறந்துகொண்டு, சூரியப்பலகைகள் மீது திரவத்தை பீய்ச்சி அடிக்க கிளம்பிச் செல்கிறது.

மின் பலகைகளின் இருப்பிடம், அவற்றின் நீள அகலம் போன்றவற்றை உணரக்கூடிய லிடார், கேமிராக்கள் போன்றவை அந்த ட்ரோனிலேயே பொருத்தப்பட்டுள்ளன. எனவே, பலகைகள் மீது துல்லியமாக துப்புரவுப் பணியை முடித்துவிட்டு, தானாகவே அந்த ட்ரோன் பறந்து வந்து பெட்டிக்குள் நுழைகிறது.

அங்கே மின்னேற்றப்பட்ட மின் கலன் மற்றும் துாய்மைத் திரவம் ஆகியவற்றை, அதுவாகவே மாற்றிக்கொண்டு மறுபடியும் மீதமுள்ள பலகைகளை பளிச்சென்று ஆக்குவதற்காக பறந்து செல்லும். இப்படியாக, 24/7 என்று வேலை பார்க்கும் திறன் அதற்கு உண்டு என சோலார் ட்ரோனின் அதிகாரிகள் கூறியுள்ளனர். சூரிய மின் பலகைகளை துடைப்பது இப்போது பல நுாறு கோடிகள் மதிப்புள்ள தனி சேவைத்துறையாக வளரத் துவங்கியுள்ளன. இந்த ட்ரோன் அந்தத் துறையினருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X