அச்சிடும் மின்னணுத் துறையில் ஆஸ்திரியாவிலுள்ள 'பிரீலோனிக்' புதுமைகள் படைத்துவருகிறது. அண்மையில் காகிதத்தில் ஒரு பியானோவை அச்சிட்டு அசத்தியிருக்கிறது.
இன்று எல்லா மொபைலிலும் அருகாமை தகவல் தொடர்புப் புலம் இருக்கிறது. அதை வைத்து கடைகளில் கட்டணம் செலுத்துவது போன்ற பணிகளைத் தவிர பல புதிய புதிய பன்களை தினமும் பலர் உருவாக்கி வருகின்றனர்.
'பிரீலோனிக் இன்டராக்டிவ் பேப்பர்' என்ற அந்தக் கருவியை மிக எளிதான முறையில் உருவாக்கி உள்ளனர். சாதாரண காகிதத்தில், பியானோ பொத்தான்கள் போல படத்தை அச்சிட்டு, அதனுடன் அச்சிட்ட சர்க்யூட் மற்றும் ஒரு மலிவு விலை சில்லு ஆகிவற்றை ஒட்டி காகித பியானோ தயாரிக்கப்படுகிறது.
இதில் சில்லு உள்ள பகுதி மீது மொபைலை வைக்க வேண்டும். மொபைலின் ஆன்டெனா அலைகள் வாயிலாக சில்லுக்கு மின்சாரம் கிடைக்கும்.பியானோவுக்கும் மொபைலுக்கும் அருகாமை தகவல் தொடர்புப் புலத்தின் வாயிலாக தொடர்பு ஏற்படும்.
மொபைலில் இதற்கென உருவாக்கப்பட்ட செயலியை வைத்திருந்தால், அதன் வாயிலாக, ஒரு பியானோவுக்குரிய எல்லா அம்சங்களும் உடனே காகித பியானோவுக்குக் கிடைத்துவிடும். காகித பியானோவில் அச்சிடப்பட்ட கட்டைகளை அமுக்கி வாசித்தால், மொபைலில் இனிய பியானோ ஒலி கேட்கிறது. ஏறக்குறைய மாயாஜாலம் போல் தோன்றினாலும் எல்லாமே, அச்சிட்ட மின்னணுவியலின் மகிமைதான்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE