சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

உருகும் பனிப்பாறை பெருகும் ஆபத்து!

Added : டிச 16, 2021 | கருத்துகள் (3)
Advertisement
காற்று மாசுபாட்டால் புவி வெப்பமாகி, பனிப்பாறைகள் உருகத் துவங்கியுள்ளன. பூமியின் இரண்டு துருவங்களிலும் பனிப் பாறைகள் பாளம் பாளமாக வெடித்து கரையும் காட்சிகளை செய்திகளில் காட்டியபடியே உள்ளனர்.இந்த நிலையில் இன்னொரு கெட்ட செய்தி வந்துள்ளது. அது என்ன தெரியுமா? பல நுாற்றாண்டுகளாக உறைந்திருக்கும் பனிப் பாறைகள் உருகி கடலில் கரையும்போது ஏராளமான நைட்ரஸ் ஆக்சைடு
உருகும் பனிப்பாறை பெருகும் ஆபத்து!

காற்று மாசுபாட்டால் புவி வெப்பமாகி, பனிப்பாறைகள் உருகத் துவங்கியுள்ளன. பூமியின் இரண்டு துருவங்களிலும் பனிப் பாறைகள் பாளம் பாளமாக வெடித்து கரையும் காட்சிகளை செய்திகளில் காட்டியபடியே உள்ளனர்.

இந்த நிலையில் இன்னொரு கெட்ட செய்தி வந்துள்ளது. அது என்ன தெரியுமா? பல நுாற்றாண்டுகளாக உறைந்திருக்கும் பனிப் பாறைகள் உருகி கடலில் கரையும்போது ஏராளமான நைட்ரஸ் ஆக்சைடு வெளிப்பட்டு, வளிமண்டலத்தில் கலக்கிறது.

இந்த நைட்ரஸ் ஆக்சைடு என்பது, ஆபத்தான பசுமைக்குடில் வாயுக்களில் ஒன்று. சைபீரியாவில் தற்போது நெடுங்காலமாய் உறைந்திருந்த பனிக்கட்டிகள் கரைவதால், அங்கு நைட்ரஸ் ஆக்சைடு நச்சு காற்றில் கலந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கார்பன்டையாக்சைடைவிட, 298 மடங்கு பலமாக நைட்ரஸ் ஆக்சைடு புவி வெப்பமாதலை வேகப்படுத்தும் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். அதேபோல, நைட்ரஸ் ஆக்சைடு, பூமிக்கு மேலே போர்த்தியிருக்கும் ஓசோன் படலத்தில் ஓட்டை போடுமளவுக்கு பலம் வாய்ந்தது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன், அமில மயமாகி வரும் கடலும், விவசாயத்தில் பயன்படுத்தும் செயற்கை உரமும்தான் காற்றில் நைட்ரஸ் ஆக்சைடு நச்சை காற்றில் கலக்கக் காரணமாக இருந்தன. இப்போது, பனிப்பாறை உருகுவதும் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளது. பனிப்பாறைகளில் வாழும் நுண்ணுயிரிகள்தான் நைட்ரஸ் ஆக்சைடு ஆபத்துக்கு முழு காரணம் என் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
16-டிச-202119:20:51 IST Report Abuse
THINAKAREN KARAMANI நெடுங்காலமாய் உறைந்திருந்த பனிக்கட்டிகள் கரைவதால் undakum நைட்ரஸ் ஆக்சைடு நச்சு காற்றில் கலப்பதால் ஆபத்து என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இனி இதனால் என்னென்ன கிருமிகள், நோய்களையெல்லாம் உண்டாகுமோ? இனி மொத்த மனித குலத்துக்குமே என்றென்றுமே ஆபத்துத்தானோ? THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Raja - singapore,சிங்கப்பூர்
19-டிச-202106:53:25 IST Report Abuse
Rajaஇந்தியா இந்த ஊழல் அரசியல்வியாதிகள் (BJP உட்பட) கையில் தினம் தினம் நாசமாகிகிட்டே போகுது. காசுக்கு பத்திரிகை தர்மத்தை விட்டு ஒரு கழிசடை கட்சிக்கு ஆதரவா எழுதுறானுங்க...
Rate this:
Karthik - Dindigul,இந்தியா
20-டிச-202115:33:02 IST Report Abuse
Karthikசிங்கப்பூர் ராசாவுக்கு "ரோத்தா" ஒன்னு பார்சல்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X