ஹிந்துக்களுக்கு எதிராக செய்தாலாவது, ஹிந்துக்கள் மத்தியில் ஒற்றுமை உணர்வு ஏற்படாதா என எண்ணுகிறதோ, தி.மு.க., அரசு?

Updated : டிச 16, 2021 | Added : டிச 16, 2021 | கருத்துகள் (23)
Advertisement
பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேட்டி: கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர். ஸ்டாலின் அரசு தேசவிரோத சக்திகளால் நடத்தப்படுகிறது. தி.மு.க., ஆட்சி வந்த பின், தமிழகத்தில் ஹிந்து கோவில்கள் இடிக்கும் வேலைகள் துவங்கியுள்ளன. ஹிந்து கோவில்களில், வழிபாட்டு உரிமை பறிக்கப்படுகிறது.இப்படி மாறி மாறி ஹிந்துக்களுக்கு எதிராக செய்தாலாவது, ஹிந்துக்கள் மத்தியில் ஒற்றுமை
பேச்சு_பேட்டி_அறிக்கை, பாஜக, எச்ராஜா, திமுக, ஹிந்துக்கள்

பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேட்டி: கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர். ஸ்டாலின் அரசு தேசவிரோத சக்திகளால் நடத்தப்படுகிறது. தி.மு.க., ஆட்சி வந்த பின், தமிழகத்தில் ஹிந்து கோவில்கள் இடிக்கும் வேலைகள் துவங்கியுள்ளன. ஹிந்து கோவில்களில், வழிபாட்டு உரிமை பறிக்கப்படுகிறது.


இப்படி மாறி மாறி ஹிந்துக்களுக்கு எதிராக செய்தாலாவது, ஹிந்துக்கள் மத்தியில் ஒற்றுமை உணர்வு ஏற்படாதா என எண்ணுகிறதோ, தி.மு.க., அரசு?கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிற்சங்க பேரவை தலைவர் பொன்னுசாமி அறிக்கை: 'பீக் ஹவர்'சில் கூடுதல் பஸ்களை இயக்காததால் கூட்டம் நிரம்பி வழிய, வேறு வழியின்றி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் படிக்கட்டில் பயணித்து விபத்தில் சிக்குகின்றனர். இதற்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். இதை தடுக்க மாணவர்களுக்காக தனி பஸ்களை இயக்க வேண்டும்.


நல்ல யோசனை தான். பஸ் பாஸ் கொடுக்கும் அரசு, அதை நிறுத்தி விட்டு, மாணவர்களுக்காக சிறப்பு இலவச பஸ் சேவையை துவக்கலாம். ஆனால், அந்த பஸ்களிலும் சீட்டில் அமராமல், படிக்கட்டில், பஸ் மேற்கூரையில் பயணித்து, தட்டி தாளம் போட்டு, டிரைவருக்கு இடைஞ்சல் ஏற்படுத்த மாட்டோம் என மாணவர்கள் உறுதி தருவரா?அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: தமிழகத்தின் பல இடங்களில் உதவித்தொகை உயர்வு கேட்டு போராடிய மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது. கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகளை, இப்படி மனிதநேயம் இல்லாமல் நடத்துவது சரியானதல்ல.


அ.தி.மு.க., ஆட்சியிலும் இப்படித் தான் நடந்தது. மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை, எத்தனை கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் தீராது போலிருக்கிறதே!தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிக்கை: நீண்ட காலமாக தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அந்த கோரிக்கையை பரிசீலிப்பதற்கு கூட, மத்திய அரசு தயாராக இல்லை. போராட்டத்தை நடத்தினால் தான், மத்திய அரசை பணிய வைக்க முடியும்.


latest tamil news
விவசாயிகள் போராட்டத்திற்கு பின் வந்த ஞானோதயம் போல இருக்கிறதே!புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு: கருணாநிதி குடும்பம் ஹிந்தியில் தொலைக்காட்சி துவங்கலாம். ஆனால், ஒரு சாதாரண குடிமகன் ஹிந்தி கற்றுக்கொள்ள கூடாது என்று அவர்கள் சொல்வது, ஹிந்திக்கு எதிராக அல்ல; இந்திய தேசத்திற்கு எதிராகத் தான்.


இந்த உண்மையை தமிழக மக்கள் எப்போது முழுமையாக புரிந்து கொள்ளப் போகின்றனரோ... அப்போது தான் தமிழகத்தில் உண்மையான மாற்றம், விடியல் ஏற்படும்!

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
16-டிச-202119:33:15 IST Report Abuse
Mirthika Sathiamoorthi பாஜக ஆளும் கர்நாடகாவில் கோயில்கள் இடிப்பு..மைசூருல் உள்ள நஞ்சன்கூடில் பழமையான இந்துகோவில் இடிப்பு..இந்த வீடியோ இணையத்தில் இருக்கு..மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்... அங்கீகரிக்கப்படாத கோயில்களை மதக் கட்டிடங்களை இடித்து அல்லது வேறு இடத்திற்கு மாற்று என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு அரசின் நடவெடிக்கையை அறிக்கையாக சமர்ப்பிக்க சொன்னது..அதற்க்கு கர்நாடக அரசின் பதில் அறிக்கை இதுவரை, மசூதிகள், கோவில்கள் மற்றும் தேவாலயங்கள் உள்ளிட்ட 6395 கட்டமைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, 2989 இன்னும் இடிக்கப்பட உள்ளன ( நன்ங்கு கவனிக்கவும் ஏற்கனவே கிட்டத்தட்ட 3000 இடிச்சாச்சு..) என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன...
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
16-டிச-202116:06:15 IST Report Abuse
raja "ஹிந்துக்கள் மத்தியில் ஒற்றுமை உணர்வு ஏற்படாதா என எண்ணுகிறதோ, தி.மு.க., அரசு?" அப்படி ஒரு ஒற்றுமை வந்து விட்டால் மொதல்ல நான் ஒரு இந்துன்னு சொல்லுகிறவன் திமுக காரணாத்தான் இருபானுவோ....
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
16-டிச-202114:02:45 IST Report Abuse
S. Bharani நீண்ட காலமாக கவனிக்கிறேன்.டாக்டர் கிருஷ்ணசாமி நல்ல தலைவர் நாட்டுநலன் தொலைநோக்கு சிந்தை உள்ளவர் தமிழக முதல்வர் ஆனால் நல்லது
Rate this:
16-டிச-202114:40:09 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்ரொம்ப நல்லவர் என்றால் நீ உன் ஊருக்கு கூப்பிட்டு செல் , பாவம் நல்லவன் என் வெளியில் கஷ்டப்படணும் , இவன் போவாத கட்சி இல்லை இவன் நல்லவன் அப்போ நீ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X