கோவை: பழநியை புனிதத் திருநகராக அறிவித்து மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக அரசுக்கு, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது:புகழ்பெற்ற புனிதத் தலம் காசி. அங்குள்ள ஆலயம் சிறியதாக இருந்தது. பிரதமர் மோடி எடுத்த முயற்சியால் அக்கோவில் 5 லட்சம் சதுர அடிக்கும் மேலாக விரிவுப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் ஒரே சமயத்தில் கூடும் அளவுக்கு ஏராள வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
இதேபோல் தமிழகத்தில் முக்கியக் கோவில்களை விரிவுப்படுத்த வேண்டும். முதல்கட்டமாக பழநி கோவிலை விரிவுப்படுத்த வேண்டும். லட்சக் கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வரும் ஆன்மிக பூமி அது. புனித நகரான காசியில் மது, இறைச்சி விற்பனைக் கடைகள் இல்லை; அதுபோல் பழநியைச் சுற்றிலும் குறிப்பிட்ட தொலைவுக்கு மது, இறைச்சிக் கடைகள் இயங்க தடை விதிக்க வேண்டும்.

புனிதத் தலமாக அறிவித்து, கழிப்பிடம், நீராடல் வசதிகளை அதிகரிக்க வேண்டும். திருப்பதியில் செயல்படுவது போல் ஏராளமான போக்குவரத்து வசதிகள், ஆன்மிக சுற்றாத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE