சர்ச்சை தீர்ப்பு : நீதிபதி பதவி உயர்வு ரத்து

Updated : டிச 18, 2021 | Added : டிச 16, 2021 | கருத்துகள் (17) | |
Advertisement
புதுடில்லி :சிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல் தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு அளித்த, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக நியமிக்க, 'கொலீஜியம்' மீண்டும் மறுத்துள்ளது.மஹாராஷ்டிர மாநிலம் மும்பை உயர் நீதிமன்ற பெண் நீதிபதி புஷ்பா கனேடிவாலா, இந்தாண்டு ஜனவரியில் 'போக்சோ' சட்ட வழக்கில் அளித்த தீர்ப்பு சர்ச்சையை
சர்ச்சை தீர்ப்பு ,நீதிபதி பதவி ரத்து

புதுடில்லி :சிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல் தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு அளித்த, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக நியமிக்க, 'கொலீஜியம்' மீண்டும் மறுத்துள்ளது.


மஹாராஷ்டிர மாநிலம் மும்பை உயர் நீதிமன்ற பெண் நீதிபதி புஷ்பா கனேடிவாலா, இந்தாண்டு ஜனவரியில் 'போக்சோ' சட்ட வழக்கில் அளித்த தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது.
'ஆடைகளுடன் உள்ள சிறுமியின் மார்பகத்தைத் தொடுவது குற்றமாகாது. உடலுடன் உடல் தொடர்பு இருந்தால் மட்டுமே குற்றமாகும்' என, தன் தீர்ப்பில் அவர் குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து மற்றொரு போக்சோ சட்ட வழக்கிலும் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கினார்.

இவர் வழங்கிய தீர்ப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.உயர் நீதிமன்ற தற்காலிக நீதிபதியாக உள்ள அவரை, நிரந்தர நீதிபதியாக்குவதற்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான கொலீஜியம் ஏற்கனவே பரிந்துரைத்திருந்தது.
இந்த சம்பவங்களுக்குப் பின் அந்தப் பரிந்துரையை கொலீஜியம் திரும்பப் பெற்றது.இந்நிலையில் இரண்டாவது முறையாக அவரை நிரந்தர நீதிபதியாக்க கொலீஜியம் மறுத்துள்ளது. பிப்ரவரியில் அவரது பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. அதன் பின் அவர் மீண்டும் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்படுவார் என, தெரிகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.B.RAM - bangalore,இந்தியா
18-டிச-202109:49:06 IST Report Abuse
V.B.RAM அப்ப கருத்தடை சாதனம் பயன் படுத்தினால் ?
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
17-டிச-202119:24:10 IST Report Abuse
D.Ambujavalli ஆடைகளைக் கலையாமல் தொடுகை, அப்படியானால் களையும் வரை பொறுத்திருந்து, முன்னேறியபின்தான் அதை வன்கொடுமையாக ஏற்பார்களா? இந்தம்மா தனது தீர்ப்பைக் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளட்டும் எதிர்விளைவு எவ்விதம் இருக்குமென்று பார்க்கட்டும்
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
17-டிச-202116:59:30 IST Report Abuse
sankar தவறான கூட்டல் கணக்கு போட்டு ஜெ.வை விடுதலை செய்த ஜட்ஜ் குமாரசாமிக்கு பிரமோஷனா, டிமோஷனா ? ஒன்றும் புரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X