'கிரிப்டோ கரன்சி'யின் முதல் ஊழல்வாதி: தங்கமணி மீது செந்தில் பாலாஜி பாய்ச்சல்

Added : டிச 16, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
''இந்திய வரலாற்றிலேயே ஊழல் பணத்தை கிரிப்டோ கரன்சி'யில் முதலீடு செய்த முதல் அரசியல்வாதி, தங்கமணி,'' என, தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.டில்லியில் , மத்திய மின்சாரம், மரபுசாரா எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை, தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தித்துப் பேசினார்.பின் அவர் கூறியதாவது:உள்கட்டமைப்புகளை பலப்படுத்திய பின், தமிழகத்தில்

''இந்திய வரலாற்றிலேயே ஊழல் பணத்தை கிரிப்டோ கரன்சி'யில் முதலீடு செய்த முதல் அரசியல்வாதி, தங்கமணி,'' என, தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
டில்லியில் , மத்திய மின்சாரம், மரபுசாரா எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை, தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தித்துப் பேசினார்.
பின் அவர் கூறியதாவது:உள்கட்டமைப்புகளை பலப்படுத்திய பின், தமிழகத்தில் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும். வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து, மின் கட்டணம் உயரப் போவதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
இதில் உண்மை இல்லை.மாயமான நிலக்கரிலஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கான காரணம் குறித்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி ஒன்றைக் கூறுகிறார். அவரது கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும், வேறு ஒரு விஷயத்தை கூறுகின்றனர். இதில் எது உண்மை என்பது குறித்து, முதலில் அவர்களே ஒரு முடிவுக்கு வரட்டும். பின், என் மீது குற்றம் சொல்லட்டும். இந்தியாவிலேயே ஊழல் பணத்தை கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயத்தில் முதலீடு செய்த முதல் அரசியல்வாதி தங்கமணி தான்.வடசென்னை மற்றும் துாத்துக்குடி அனல் மின் நிலையங்களில் காணாமல் போன நிலக்கரி, கண்ணுக்கு தெரியாத 'கிரிப்டோ கரன்சி' இரண்டுக்கும் அவர் முதலில் விளக்கம் சொல்லட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.10 ஆயிரம் டன் நிலக்கரிமத்திய அமைச்சரிடம் செந்தில் பாலாஜி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்திற்கு ஆண்டுக்கு 2.37 கோடி டன் நிலக்கரி மத்திய அரசால் அனுப்பப்பட வேண்டிய நிலையில், 1.71 கோடி டன் மட்டுமே வழங்கப்படுகிறது. தினமும் 10 ஆயிரம் டன் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.ஒடிசா மாநிலம், சந்திரபிலா சுரங்கத்தில் இருந்து நிலக்கரி ஒதுக்கீடு பெற, 2016 மார்ச் 30ல் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், 66 மாதங்கள் முடிந்தும், நிலக்கரி எடுக்கப்படவில்லை. வனத் துறை ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இதற்கான ஒப்பந்த காலத்தை நீட்டித்து தர வேண்டும்.மத்திய அரசின் நிதி நிறுவனங்களிடம் பெறப்படும் கடன்களுக்கு வட்டி விகிதங்கள் 9.50 சதவீதம் முதல் 12.65 சதவீதமாக உள்ளன.அனைத்து வகை கடன்களுக்கும் 8.50 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும்.நிலுவையில் உள்ள 38 கோடி ரூபாயை, 'டெடா' எனப்படும் எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு உடனே வழங்க வேண்டும். மின் கொள்முதலுக்கு உத்தரவாதமாக வங்கி உறுதி கடிதம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
17-டிச-202104:36:01 IST Report Abuse
RaajaRaja Cholan இங்க ஊழல், லஞ்சம் என்பது சாதாரண சொல் ஆகிவிட்டது, எவனுக்கும் யாருக்கும் மக்களுக்கும் அது மிக பெரிய தேச துரோகத்திற்கு இணையான குற்றமாக தெரியவில்லை, இப்படி ஒவ்வொருத்தனும் நாட்டை சுரண்டினால், நாட்டிடம் மக்களிடம் என்ன இருக்கும். இவனுங்க போட்டி யாரு நல்லவன் என்பதில் இல்லை. யாரு பெரிய திருடன் என்பது தான் இவனுங்க போட்டியே, லஞ்சம், கையூட்டு வாங்கும் எவனும் எந்த கட்சிக்காரனும், அரசு அதிகாரியோ, அனைவரும் தேச துரோகியே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X