12 பேருக்கு 'ஒமைக்ரான்' அறிகுறி சுகாதார துறை செயலர் தகவல்

Updated : டிச 18, 2021 | Added : டிச 16, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை :''தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய 'ஒமைக்ரான்' வைரஸ் கண்டறியப்பட்டு உள்ள நிலையில், மேலும் 12 பேருக்கு அதன் அறிகுறி உள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா வார்டுகளை ஆய்வு செய்த பின், அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
12 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி , சுகாதார செயலர் தகவல்

சென்னை :''தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய 'ஒமைக்ரான்' வைரஸ் கண்டறியப்பட்டு உள்ள நிலையில், மேலும் 12 பேருக்கு அதன் அறிகுறி உள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.


சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா வார்டுகளை ஆய்வு செய்த பின், அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


கண்காணிக்கும் பணி



அதிக ஆபத்து நிறைந்த நாடுகளில் இருந்து வந்த 12 ஆயிரத்து 503 பேருக்கும்; குறைந்த ஆபத்து நிறைந்த நாடுகளில் இருந்து வந்த 1,947 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்
கொள்ளப்பட்டது.இதில், 22 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில், நைஜீரியா நாட்டில் இருந்து வந்தவருக்கு, ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் 11 பேருக்கு, கொரோனா தொற்று உறுதியாகி, ஒமைக்ரான் அறிகுறி உள்ளது.

மேலும், காங்கோவில் இருந்து வந்த, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, கொரோனா தொற்றுடன், 'எஸ்' ஜீன் என்ற மரபியல் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, 12 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டு, அவர்களது மாதிரிகள் பெங்களூரு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பணி தீவிரம்

தமிழக மக்களிடையே முக கவசம் அணிவது குறைந்துள்ளது. மக்கள் தொடர்ந்து முக கவசம் அணிய வேண்டும். இதை கண்காணிக்கும் பணி தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது.கடந்த அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்தது. தற்போது, 40 ஆயிரத்து 24 ஆக்சிஜன் படுக்கைகள்; 8,679 தீவிர சிகிச்சை படுக்கைகள் உட்பட, ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 252 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.எனவே, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் இல்லை. மேலும், கொரோனா சிகிச்சைக்கான அனைத்து மருந்துகளும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன.


பரிசோதனை முடிவு



தமிழகத்தில் உள்ள மரபணு பகுப்பாய்வு ஆய்வகம், அனைத்து வசதிகளையும் கொண்டது. எனவே, தேசிய வைராலஜி நிறுவனம், தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆய்வகத்தை, அவர்களது கிளை ஆய்வகமாக்க நடவடிக்கை எடுப்பதாக
தெரிவித்துள்ளனர்.இதன் வாயிலாக, இரு முறை மரபணு பரிசோதனை செய்வது தவிர்க்கப்படும். பரிசோதனை முடிவுகளையும் மிக விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-டிச-202112:07:56 IST Report Abuse
அப்புசாமி ஒமிக்ரான் தமிழ்நாடில் பரவாத வரைக்கும் மா.சு மெடல் குத்திக்கிட்டிருந்தாரு. இப்போ சுகாதார செயலர் ஓமிக்ரான் அறிவிபை செய்யுறாரு. இந்த விஷயத்தில் மட்டும்.மத்திய அரசை காப்பியடிக்கிறாங்கன்னு அண்ணாமலையார் பெருமிதப் படலாம்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
17-டிச-202108:27:14 IST Report Abuse
RajanRajan இன்னாது கோவாலாபுரத்துலே ஒமிக்கிறான் பரவுதா. ஆகா வைரஸ் எப்படிடா இடம் தேடி வலை வீசுது. அப்போ நாட்டுக்கு நல்லகாலம் பொறக்குதுன்னு வைரஸ் கோடாங்கி சொல்லுதோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X