பள்ளிபாளையம்:முன்னாள் அமைச்சர் தங்கமணி சம்பந்தி வீட்டில் நடந்த சோதனையில், பல முக்கிய சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே கோவிந்தம்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீட்டில், நேற்று முன்தினம் காலை 6:00 முதல், இரவு 8:00 மணி வரை, 14 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர்.
சோதனை நடந்த போது, தங்கமணி மட்டும் வீட்டில் இருந்தார்; குடும்பத்தினர் வெளியூரில் இருந்தனர். சோதனை முடிந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் திரும்பிச் செல்லும்போது, தங்கமணியின் மொபைல் போனை மட்டும் எடுத்துச் சென்றனர். தங்கமணி சாதாரண 'பட்டன்' போன் தான் பயன்படுத்தி வருகிறார்.
அவருடன் பேசிய முக்கிய நிர்வாகிகள், பிரமுகர்கள், தொழிலதிபர்கள் குறித்து தகவல் சேகரித்து, அதனடிப்படையில் விசாரணை நடக்க உள்ளது.பள்ளிபாளையம் அடுத்த சில்லாங்காடு பகுதியில் தங்கமணியின் சம்பந்தி வீடு, அலுவலகங்கள், 'ரைஸ் மில்' தனித்தனியாக உள்ளன; அங்கும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE