பெயரளவில் சோதனை அண்ணாமலை சாடல்

Added : டிச 16, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
நாமக்கல்: ''அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் பெயரளவில் மட்டுமே சோதனை நடத்தப்படுகிறது,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.நாமக்கல் அடுத்த பொம்மைகுட்டைமேட்டில் பா.ஜ., சார்பில், இயற்கை விவசாயம் குறித்த தேசிய மாநாடு நடந்தது. மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.அவர் அளித்த பேட்டி:அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து, பா.ம.க., விலகி இருந்தாலும், மத்திய அரசுடன்,
 பெயரளவில் சோதனை அண்ணாமலை சாடல்

நாமக்கல்: ''அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் பெயரளவில் மட்டுமே சோதனை நடத்தப்படுகிறது,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
நாமக்கல் அடுத்த பொம்மைகுட்டைமேட்டில் பா.ஜ., சார்பில், இயற்கை விவசாயம் குறித்த தேசிய மாநாடு நடந்தது. மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
அவர் அளித்த பேட்டி:அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து, பா.ம.க., விலகி இருந்தாலும், மத்திய அரசுடன், அ.தி.மு.க., இணக்கமான போக்கை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. ஆட்சியில் இருந்தபோது முக்கிய மசோதாக்களுக்கு ஆதரவு வழங்கியது. அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., தொடரும்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இல்லை. திண்டுக்கல் மாவட்டம், பாச்சலுார் அரசு பள்ளியில் படித்த, ஐந்தாம் வகுப்பு மாணவி, பள்ளிக்கு அருகிலேயே உயிருடன் எரிக்கப்பட்டு உள்ளார்.
பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதனால் தான் தமிழக அரசை, பா.ஜ., குற்றஞ் சாட்டி வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் பேசியதே, தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழக்காக உள்ளது. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை, பெயரளவில் மட்டுமே உள்ளது. எதுவும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
17-டிச-202119:41:28 IST Report Abuse
D.Ambujavalli சும்மா தேர்தல் வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டு அதன்படியே லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை எடுத்துவிட்டோம் என்று மீடியாக்கள் மூலம் தம்பட்டம் அடித்துவிட்டு, புறவாசல் வழியாக 'அடித்ததில்' பங்கு பெற்று கேஸ் எதுவும் இல்லாமல் அமுக்கும் உத்திதான் இது என்ன கூக்குரலிட அழைத்துவரப்பட்ட மக்களுக்கு நல்ல உணவு கிடைக்கிறது சப்ளை செய்யும் உணவகங்களுக்கு நல்ல பிசினஸ் நடக்கிறது
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-டிச-202106:56:09 IST Report Abuse
Kasimani Baskaran தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் லஞ்சஒழிப்புத்துறையால் லஞ்சத்தை ஒளிக்கத்தான் முடியும். ஒழிக்க வாய்ப்பே இல்லை.
Rate this:
17-டிச-202113:45:31 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்Please don't repeat the same comment...
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
17-டிச-202102:20:21 IST Report Abuse
John Miller தமிழக அரசு இந்தத் தடவையாவது இவரது பேச்சை கேட்டு தங்கமணி, வீரமணி, வேலுமணி, மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து புலால் சிறையில் அடித்து, மாரிதாஸுக்கு கம்பெனி கொடுக்க வைக்க வேண்டும்.
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-டிச-202108:28:24 IST Report Abuse
Kasimani Baskaran"புலால் சிறையில் அடித்து" - மட்டன் சிறையா? அடைத்த அல்லது அடித்தா? தாங்கள் ஆந்திர வந்தேறித் திராவிடன் போல இருக்கிறது......
Rate this:
Mohanraj - Rasipuram,இந்தியா
17-டிச-202110:21:13 IST Report Abuse
Mohanraj@John Miller சார், உங்க தமிழை படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X