எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.352.50 கோடி ஒதுக்கியது அரசு

Updated : டிச 18, 2021 | Added : டிச 17, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள, மொத்த நிதி ஒதுக்கீட்டில், 50 சதவீதமான 352.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.'எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி யாருக்கும் ஒதுக்கப்படாமல் உள்ளது. ஆண்டு முடிவடையும் நிலையில், உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும்' என, இம்மாதம் 2ம் தேதி எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.அதைத்
எம்.எல்.ஏ.,தொகுதி, மேம்பாடு, நிதி ரூ.352.50 கோடி ,

சென்னை: எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள, மொத்த நிதி ஒதுக்கீட்டில், 50 சதவீதமான 352.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.'எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி யாருக்கும் ஒதுக்கப்படாமல் உள்ளது. ஆண்டு முடிவடையும் நிலையில், உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும்' என, இம்மாதம் 2ம் தேதி எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.அதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 50 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும் ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.அந்த வகையில், 234 எம்.எல்.ஏ.,க்கள், ஒரு நியமன எம்.எல்.ஏ.,வுக்கு, 705 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். இதில் 50 சதவீதமான 352.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.இந்நிதியில், எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள பரிந்துரை செய்யலாம். தொகுதி மக்களின் உட்கட்டமைப்பு தேவைகள், நிலையான சொத்துக்களை உருவாக்கும் வகையிலான பணிகள் அனுமதிக்கப்படுகின்றன.எம்.எல்.ஏ.,க்கள், தங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில், குறைந்தபட்சம் 22 சதவீதத்தை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகள், நகர்ப்புற குடிசை மக்களின் வளர்ச்சி பணிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
தங்களுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டிற்கு, முழுமையான பணிகளை மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரைக்க வேண்டும். முந்தைய நிதி ஆண்டின் சேமிப்பு நிதி, வங்கி வட்டி ஆகியவற்றில் இருந்தும், பணிகளை பரிந்துரை செய்யலாம். எம்.எல்.ஏ., நிதியில் 90 லட்சம் ரூபாய்க்கு முன்னுரிமை பணிகளை எடுத்து செய்ய வேண்டும். மீதமுள்ள தொகைக்கு, தடை செய்யப்பட்ட பணிகளை தவிர்த்து, எந்தப் பணியையும் மேற்கொள்ளலாம்.எந்தப் பணிகளை மேற்கொள்ளலாம் என்ற விபரம், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
17-டிச-202119:48:39 IST Report Abuse
S. Narayanan வரும் மார்ச் மாதத்துக்குள் பொய் கணக்கு எழுதி மொத்த நிதியையும் ஏப்பம் விட்டு விடுவார்கள் திமுக MLA நிர்வாகிகள்.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
17-டிச-202119:32:45 IST Report Abuse
Duruvesan அப்பாடி கீசோறுக்கு குடுத்த காசு எடுத்தாச்சு
Rate this:
Cancel
gopalasamy N - CHENNAI,இந்தியா
17-டிச-202119:23:09 IST Report Abuse
gopalasamy N அரசு ஊழியர் பென்ஷனேர் அகவிலை படி கொடுக்க மட்டும் பணம் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X