மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

Added : டிச 17, 2021 | கருத்துகள் (10)
Advertisement
புதுடில்லி : மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படுவதோடு 18 மாத நிலுவை தொகையும் விரைவில் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு கடந்த ஆண்டு மே மாதம் முதல் 13
7th Pay Commission, Central Govt Employees, Salary Increase, Govt Employees, DA, Arrears

புதுடில்லி : மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படுவதோடு 18 மாத நிலுவை தொகையும் விரைவில் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு கடந்த ஆண்டு மே மாதம் முதல் 13 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.


latest tamil news


இந்நிலையில் 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை ஜூலை மாதம் 28 சதவீதமாக உயர்த்தி பிரதமர் மோடி உத்தரவிட்டார். அக்டோபரில் இது மேலும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமானது. கடந்த 18 மாதங்களாக நிலுவையில் இருக்கும் அகவிலைப்படி உயர்வை அளிக்கும்படி மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அடுத்த மாத துவத்தில் இந்த நிலுவை தொகை வழங்கப்படுவதோடு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gopalasamy N - CHENNAI,இந்தியா
17-டிச-202118:46:10 IST Report Abuse
gopalasamy N தமிழக அரசு ஊழியர்கள் பென்ஷனேர் தர வேண்டிய அக விளைப்படியை வழங்காமல் நாமம் போட்டு உள்ளது
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
17-டிச-202118:23:25 IST Report Abuse
அம்பி ஐயர் இங்க இருக்குற ஜாக்டோ ஜியோ இப்போ என்ன பண்ணுது.....??? போன ஆட்சியில அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினவங்க எங்கே போனாங்க....
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
17-டிச-202114:22:32 IST Report Abuse
S.Baliah Seer அரசு பணியாளர்களுக்கு DA -வை நிறுத்தியதால் விலைவாசி குறையவில்லை. மாறாக அத்யாவசி பண்டங்கள், காய்கறிகள் விலை தாறுமாறாக ஏறிவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X