சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்தவர்கள்... அன்னூர் தொழிற்பேட்டைத் திட்டத்தை எதிர்க்காதது ஏன்?| Dinamalar

சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்தவர்கள்... அன்னூர் தொழிற்பேட்டைத் திட்டத்தை எதிர்க்காதது ஏன்?

Updated : டிச 17, 2021 | Added : டிச 17, 2021 | கருத்துகள் (46) | |
சேலம் - சென்னை, எட்டு வழி பசுமை வழி சாலை திட்டத்துக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், களம் இறங்கியவர்கள், கோவை, அன்னுாரில், 3,832 ஏக்கர் விவசாய நிலத்தை அரசின் பயன் பாட்டுக்கு எடுக்க உள்ள நிலையில், அதற்கு எதிராக குரல் கொடுக்காமல் உள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.சேலம் - சென்னை எட்டு வழி பசுமை சாலை திட்டத்துக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு

சேலம் - சென்னை, எட்டு வழி பசுமை வழி சாலை திட்டத்துக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், களம் இறங்கியவர்கள், கோவை, அன்னுாரில், 3,832 ஏக்கர் விவசாய நிலத்தை அரசின் பயன் பாட்டுக்கு எடுக்க உள்ள நிலையில், அதற்கு எதிராக குரல் கொடுக்காமல் உள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.latest tamil newsசேலம் - சென்னை எட்டு வழி பசுமை சாலை திட்டத்துக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கடந்த, 2018 மே முதல் வாரத்தில், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பல்வேறு அமைப்புக்கள் விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி போராட்டத்தில் இறங்கின.
இதில், சேலமே குரல் கொடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பியுஷ் மானுஷ், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அவரின் அழைப்பின் பேரில் சேலம் வந்த நடிகர் மன்சூர் அலிகான், 'எட்டு வழிச்சாலை திட்டத்தை எவன் கொண்டு வந்தாலும் கையை வெட்டுவோம்' என, ஆவேசமாக பேசியதால், போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டார்.


22 அமைப்புகள்


இவர்களை போல், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விவசாயிகள் மத்தியில் ஆவேசமாக பேசி திட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்தார்.நடிகர் சிம்பு, திரைப்பட இயக்குனர் வெற்றி மாறன், திராவிடர் விடுதலை கழகத்தினர், கம்யூனிஸ்ட் கட்சியினர், அதன் ஆதரவு அமைப்புக்கள், விவசாய சங்கங்கள் என, 22 அமைப்புக்கள் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்ததோடு, பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.


latest tamil news

மக்களை திசை திருப்பும் நோக்கம்

இவர்கள் அனைவரும் விவசாயிகளின் ஆதரவாளர்கள் என தங்களை காட்டிக் கொண்டு, மத்திய அரசையும், அப்போதைய மாநிலத்தில் ஆட்சி செய்த, அ.தி.மு.க.,வை எதிர்க்கும் நோக்கிலும், அரசுகளுக்கு எதிராக மக்களை திசை திருப்பும் நோக்கில் செயல்பட்டனர். தி.மு.க., தலைமையும் அப்போது இத்திட்டத்தை எதிர்த்தது.
இந்நிலையில் தற்போது, கோவை மாவட்டம் அன்னுார் அதை சுற்றியுள்ள கிராமங்களில், 3,832 ஏக்கர் விவசாய நிலத்தில், தமிழக அரசின் தொழில் வளர்ச்சி கழகமான 'டிட்கோ' சார்பில், தொழில்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டத்தால், விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதால், திட்டத்தை கை விட வேண்டும், என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மட்டுமே விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். பின் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.


தி.மு.க., ஆதரவு மனப்பான்மை

ஆனால், எட்டு வழி பசுமை சாலை திட்டத்துக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அமைப்புக்கள், அன்னுார் விவசாய நிலம் கையப்படுத்துவதற்கு எதிராக குரல் கொடுக்காமல், கப் சிப்பாக இருப்பதற்கு, அந்த அமைப்புக்களின், தி.மு.க., ஆதரவு மனப்பான்மையே காரணம் என விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழக சட்டசபை எதிர்கட்சி தலைவர் பழனிசாமி கூட மவுனமாக உள்ளார். எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அனைவரும், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து, இத்திட்டம் செயல்படுத்துவதை தடுக்க குரல் கொடுக்க வேண்டும். விவசாயிகள் நலனுக்காக போராட வர வேண்டும்.


latest tamil news

அண்ணாமலை அழைப்பு


இது குறித்து பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது:கோவை அன்னூரில் முழுக்க முழுக்க பாசன வசதி பெற்று பயிர்கள் விளைவிக்கப்படும் விளை நிலங்களை, சிட்கோ தொழில் பேட்டை அமைக்க, விவசாயிகளிடம் இருந்து அபகரிக்கப்பார்க்கிறது தமிழக அரசு. முப்போகம் விளையும், 3,832 ஏக்கர் நிலங்களை, ஒரே இடத்தில் இருந்து எடுக்கப் பார்க்கின்றனர். அப்படி எடுக்கப்படும் நிலத்துக்கு சந்தை மதிப்பைத்தான் தருவார்களாம். உரிய இழப்பீட்டை தர மாட்டார்களாம்.அதனால் தான், அன்னூரில் விவசாயிகளிடம் எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது. நியாயமான எதிர்ப்புத்தான். தொழில் பேட்டையை வேறு தரிசு நிலங்களில் அமைத்துக் கொள்ளலாம்.


விளை நிலத்தில் ஏன் அமைக்க வேண்டும்?


அதனால்தான், தமிழக பா.ஜ., விவசாயிகளின் நன்மை கருதி, இந்த விஷயத்தில் தனியாக குரல் எழுப்பி போராடி வருகிறது.எனவே, அன்னூர் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு, தமிழகத்தின் எல்லா விவசாய அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும்.
எட்டு வழிச் சாலைக்காக போராடியவர்கள், உண்மையிலேயே விவசாயிகளின் பாதிப்புக்காகத்தான் போராடினோம்; எங்களுக்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்று சொன்னால், அன்னூர் விவசாயிகளோடும் கைகோர்த்து போராட வேண்டும்.
அதை அவர்கள் செய்ய முன் வர வேண்டும். அதற்காக, அழைப்பு விடுக்கிறேன். அப்படி செய்ய மறுத்தால், விவசாயிகள் நலன் முக்கியம் அல்ல. வேறு உள்நோக்கம் இருக்கிறது என்பதை அவர்களே ஒப்புக் கொள்வது போல ஆகிவிடும்.-இவ்வாறு அவர் கூறினார்.

-நமது நிருபர்-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X