‛‛சிரிச்சா போச்சு... சிறையே ஆச்சு...'': வடகொரிய அதிபரின் அடாவடி அறிவிப்பு!

Updated : டிச 17, 2021 | Added : டிச 17, 2021 | கருத்துகள் (34) | |
Advertisement
சியோல்: வடகொரிய முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல்லின் 10ம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் வகையில், அந்நாட்டு மக்கள் 10 நாட்களுக்கு சிரிக்கவோ, பிறந்தநாள் கொண்டாடவோ, மது அருந்தவோ தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார். தடையை மீறுபவர்களுக்கு சிறை தண்டனை வழப்படும் எனக் கூறப்படுகிறது.வடகொரியாவின் முன்னாள் அதிபரான கிம் ஜாங் இல்லின் 10ம் ஆண்டு நினைவு தினமான இன்று
North Koreans, Banned, Laughing, 10 Days, Kim Jong Il, 10th Death Anniversary, வடகொரியா, மக்கள், சிரிப்பு, தடை, அதிபர், கிம் ஜாங் இல்

சியோல்: வடகொரிய முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல்லின் 10ம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் வகையில், அந்நாட்டு மக்கள் 10 நாட்களுக்கு சிரிக்கவோ, பிறந்தநாள் கொண்டாடவோ, மது அருந்தவோ தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார். தடையை மீறுபவர்களுக்கு சிறை தண்டனை வழப்படும் எனக் கூறப்படுகிறது.

வடகொரியாவின் முன்னாள் அதிபரான கிம் ஜாங் இல்லின் 10ம் ஆண்டு நினைவு தினமான இன்று (டிசம்பர் 17) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டு மக்களுக்கு விசித்திரமான தடையை விதித்துள்ளார். அதாவது, முன்னாள் அதிபரின் 10ம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக 10 நாட்களுக்கு மக்கள் யாரும் சிரிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், மது அருந்துவது, கடைகளில் மளிகை பொருட்கள் வாங்குவது, பிறந்தநாள் கொண்டாடுவது, ஓய்வாக சந்தோஷமாக இருப்பது உள்ளிட்டவற்றிற்கும் அவர் தடை விதித்துள்ளார்.


வட கொரியா மக்கள் 10 நாட்களுக்கு சிரிக்க தடை | North Korea Bans Citizens From Laughing

latest tamil newsஇது தொடர்பாக அந்நாட்டில் வசிக்கும் பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் கூறுகையில், 'கடந்த காலங்களில் இதுபோன்று துக்க காலத்தில் தடையை மீறி மது அருந்துபவர்களை கைது செய்து குற்றவாளியாக நடத்தப்பட்டனர். அவர்களை அழைத்து சென்ற பிறகு இதுவரையில் அவர்களை பார்த்தது இல்லை. இறுதிச்சடங்குகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 10 நாள் துக்கக் காலத்தில் தடையை மீறுவது கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்,' எனக் கூறினார். வடகொரியாவின் இந்த தடை உத்தரவு கேலிகூத்தாகவும், தனிநபரின் மகிழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
18-டிச-202110:06:20 IST Report Abuse
PRAKASH.P Really bad country leader...
Rate this:
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
18-டிச-202104:04:59 IST Report Abuse
V.B.RAM இந்த ஜனநாயக நாட்டில் பதவி அதிகாரம் கிடைத்தவுடன் உலகிலேயே மிகப்பெரிய அழகான மெரினா கடற்கரையை சுடுகாடாக மாற்றவில்லையா. ?
Rate this:
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
18-டிச-202104:03:22 IST Report Abuse
V.B.RAM இதெல்லாம் ஒரு சர்வாதிகார நாட்டில் பெரிய விஷயமே இல்லை. இங்கு ஜனநாயக நாட்டில் அதிகாரம் கிடைத்தவுடன் தமிழ் புத்தாண்டையே மாற்றவில்லையா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X