வளர்ச்சிக்கு அனைவரும் உழைக்க வேண்டும்: பிரதமர் மோடி

Updated : டிச 17, 2021 | Added : டிச 17, 2021 | கருத்துகள் (88) | |
Advertisement
வாரணாசி: இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களின் வளர்ச்சிக்கும் அனைவரும் பாடுபட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.உ.பி., மாநிலம் வாரணாசியில் மேயர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில், 120 நகர மேயர்கள் கலந்து கொண்டனர். இதில், வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: வரலாற்று சிறப்பு மிக்க நகரங்களின் வளர்ச்சிக்கு வாரணாசி முன்மாதிரியாக
பிரதமர் மோடி, நகரங்கள், வளர்ச்சி, மேயர்

வாரணாசி: இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களின் வளர்ச்சிக்கும் அனைவரும் பாடுபட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.



உ.பி., மாநிலம் வாரணாசியில் மேயர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில், 120 நகர மேயர்கள் கலந்து கொண்டனர். இதில், வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: வரலாற்று சிறப்பு மிக்க நகரங்களின் வளர்ச்சிக்கு வாரணாசி முன்மாதிரியாக உள்ளது. இதில் இருந்து நாம் பாடம் கற்று கொள்ளலாம். உள்ளூர் மக்களின் திறன் மற்றும் பொருட்களை நாம் மதிக்க வேண்டும். வரலாறு, பாரம்பரியம் மற்றும் வளர்ச்சி ஆகியவை ஒன்றோடு ஒன்று கைகோர்த்து செல்ல வேண்டும். வளர்ச்சிக்கான கொள்கைகளுக்கு வாரணாசியில் வளர்ச்சித்திட்டங்கள் புதிய பாதையை ஏற்படுத்தி கொடுக்கும்.



அனைத்து நகரங்களும் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். தங்களது நகரங்கள் தூய்மையாக வைத்து கொள்வதற்கு அனைத்து மேயர்களும் முயற்சி செய்ய வேண்டும். தூய்மைபடுத்துவது போல், அழகுபடுத்துவதும் மிகவும் முக்கியம்.


தங்கள் நகரின் வளர்ச்சி மற்றும் சிறப்பான எதிர்காலத்திற்காக கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மேயர்கள் தவற விட மாட்டார்கள் என நம்புகிறேன். காசியில் நடக்கும், இந்த நிகழ்ச்சியானது, இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களும் வளர்ச்சி பெறுவதற்கு முக்கியமாக இருக்கும்.



இந்தியாவிற்கு இன்று புரட்சி தேவையில்லை. நமது பாரம்பரியமிக்க கட்டடங்களை இடிக்கவோ, புனரமைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவற்றிற்கு புத்துயிர் பெற செய்ய வேண்டும். தங்களது நகரத்தை தூய்மையான நகர பட்டியலில் முதலிடத்திற்கு கொண்டு வர முன்முயற்சி செய்ய வேண்டும்.


latest tamil news



நமது தொழிலாளர்களையும், வியாபாரிகளையும் பாதுகாக்க வேண்டும். தெருவோர வியாபாரிகளுக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை பயன் அளிக்கும். நமது நகரங்கள் பெரும்பாலானவை, பாரம்பரியம் மிகுந்தவை. அவர்களின் வளர்ச்சியும் பாரம்பரியத்தை சார்ந்து இருக்க வேண்டும். அந்த இடங்களில் இருந்து. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
17-டிச-202120:46:01 IST Report Abuse
செல்வம் ,, ஹஹஹஹ ஒரே காமெடி ..
Rate this:
Cancel
17-டிச-202119:22:16 IST Report Abuse
அப்புசாமி தமிழக மக்கள் உழைத்து அதனால் வரும் ஜி.எஸ்.டி யை உ.பி ல கோவில் வளாஜம் இவர் தொகுதில கட்டுறாரு. இன்னும் நல்லா உழையுங்க தமிழர்களே.. உ.பி பீடா வாயனுங்க உழைக்க மாட்டாங்க.
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
17-டிச-202119:05:11 IST Report Abuse
Suri மயிலுக்கு தீனி போடுவது உழைக்கும் வகையறாவில் சேருமா? அரசர் என்றால் ஐந்து அறிவு ஜந்துகளுக்கும் அரசனா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X