பிரதமர் மோடிக்கு பூடானின் உயரிய விருது

Updated : டிச 17, 2021 | Added : டிச 17, 2021 | கருத்துகள் (11) | |
Advertisement
திம்பு: பூடான் நாட்டின் உயரிய விருதான நகடக் பெல் ஜி கோர்லோ விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.பூடான் நாட்டின் 114வது தேசிய நாள் இன்று(டிச.,17) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான விருதை அந்நாடு அறிவித்துள்ளது.இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் லோடோய் ஷெரீங் வெளியிட்ட அறிக்கையில்,'பூடானின் உயிரிய விருது இந்திய
bhutan, award, Pm Modi, narendramodi

திம்பு: பூடான் நாட்டின் உயரிய விருதான நகடக் பெல் ஜி கோர்லோ விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



பூடான் நாட்டின் 114வது தேசிய நாள் இன்று(டிச.,17) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான விருதை அந்நாடு அறிவித்துள்ளது.


இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் லோடோய் ஷெரீங் வெளியிட்ட அறிக்கையில்,'பூடானின் உயிரிய விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்,' எனக்கூறப்பட்டுள்ளது.




latest tamil news



மற்றொரு அறிக்கையில், கோவிட் பெருந்தொற்று காலத்தில், பூடானுக்கு நிபந்தனையற்ற நட்புறவையும், ஆதரவையும் மோடி வழங்கினார். விருதுக்கு அவர் தகுதியானவர். பூடான் மக்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். ஆலோசனைகளின் போது, சிறப்பான மற்றும் ஆன்மீகவாதியாக உங்களை பார்த்தோம். கவுரவத்தை நேரில் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-டிச-202112:01:03 IST Report Abuse
Srinivasan Venkatesan இவரை‌ விட தகுதி வாய்ந்தவர் உலகில் இல்லை , ஜெய் மோடி சர்கார்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-டிச-202105:01:31 IST Report Abuse
J.V. Iyer இவரால் விருதுகள் பெருமை அடைகின்றன. வாழ்க நீ எம்மான்.
Rate this:
Cancel
17-டிச-202122:49:00 IST Report Abuse
பேசும் தமிழன் அடுத்த நாட்டுக்காரனுக்கு நமது பிரதமர் அருமை பெருமை தெரிகிறது... ஆனால் இங்குள்ள சில கூலிபான்ஸ் மற்றும் கம்மிகளுக்கு தெரிய மாட்டேன்குது... கழுதைக்கு தெர்யுமா கற்பூர வாசனை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X