தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தமிழக மாநில பாடலாக அறிவிப்பு

Updated : டிச 17, 2021 | Added : டிச 17, 2021 | கருத்துகள் (92) | |
Advertisement
சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழக மாநில பாடலாக அரசு அறிவித்துள்ளது. மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக வெளியான அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: 1891ம் ஆண்டு வெளியிடப்பட்ட நாடக நூலான மனோன்மணீயம் நூலில் 'தமிழ்த் தெய்வ வணக்கம்' எனும் தலைப்பிலுள்ள பாடலின் ஒரு பகுதியை தமிழ்த்தாயை
தமிழ்த்தாய், வாழ்த்துப்பாடல், மாநில பாடல், அரசாணை, தமிழக அரசு

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழக மாநில பாடலாக அரசு அறிவித்துள்ளது. மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: 1891ம் ஆண்டு வெளியிடப்பட்ட நாடக நூலான மனோன்மணீயம் நூலில் 'தமிழ்த் தெய்வ வணக்கம்' எனும் தலைப்பிலுள்ள பாடலின் ஒரு பகுதியை தமிழ்த்தாயை போற்றும் வகையில் அமைந்த வரிகளை ஏற்று, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை 1970ம் ஆண்டு நவ.,23ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து, அரசாணை வெளியிட்டார். அவ்வரசாணையை தொடர்ந்து, தமிழகத்தில் அரசு விழாக்களில், கல்வி நிலையங்களில், பொது நிறுவனங்களில், பொது நிகழ்ச்சிகளின் போது நிகழ்வு துவங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டு வருகிறது.


தமிழகத்தில் அனைத்து விழாக்களிலும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய "நீராரும் கடலுடுத்த" எனும் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக பாடப்பட்டு வருகிறது. இதனை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் சிடிக்களில் போடுவதை தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

latest tamil newsஇந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழக அரசின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்படுகிறது. இப்பாடல் வரிகளை 55 வினாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் (மோகன ராகம்) மூன்றன் நடையில் (திசுரம்) பாடப்பட வேண்டும். தமிழகத்தில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைகள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். பாடப்படும் போது எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
பொது நிகழ்ச்சிகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசை வட்டுக்களை கொண்டு இசைப்பதை தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
18-டிச-202105:10:33 IST Report Abuse
Srivilliputtur S Ramesh தமிழ்த்தாய் வாழ்த்து பற்றி ஈ. வெ. ராமசாமி செய்த வியாக்ஞானம் " நீ வாழ்த்துவதால் உன் தமிழ்த்தாய்க்கு ஒரு கொம்பு முளைத்து விடுமா ? கடவுள் வாழ்த்து வேண்டாம் என்றால், உடனே தமிழ்த்தாய் வாழ்த்து. ஒரு முட்டாள்தனத்துக்குப்பதில் இன்னொரு முட்டாள்தனமா ? 'விடுதலை' இதழ், 13-04-1972
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
18-டிச-202105:02:46 IST Report Abuse
Srivilliputtur S Ramesh 1. பாரதியின் தாய் மொழி வாழ்த்து இதோ 2.வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழிய வே 3. ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசைகொண்டு வாழிய வே 4. எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழிய வே 5. சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே 6. தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நா டே 7. வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி யே 8. வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழிய வே என்ற மேற்கூறிய பாடலை நம் அருமைத்தாய் மொழி வாழ்த்தாக அமைத்து, இழந்து போன தமிழின் பெருமையை நாம் மீட்போம் என்று என் மருந்தனைய தமிழ் மக்களிடம், அன்பு மிகக்கொண்டு வேண்டுகோள் விடுக்கிறோம்
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
18-டிச-202105:00:00 IST Report Abuse
Srivilliputtur S Ramesh சுந்தரம் பிள்ளையை விளாசித்தள்ளிய பாரதி : சுந்தரம் பிள்ளை, தன் நூலில் திராவிடத்தை உருவாக்கப்படுத்திச் செய்திருக்கும் பிதற்றல் கருத்துக்களைக் கண்டு, வெகுண்டு பொங்கிய பாரதி, தன் கோபத்தையெல்லாம் திரட்டி, ‘சின்ன சங்கரன் கதை' என்ற நூலில், தனது அங்கத்தக்கருத்துக்களால் சவுக்கடி தந்து, சுந்தரம் பிள்ளையை விளாசித்தள்ளி விடுகிறார். “...திருவணந்தபுரம் பெரிய கலாசாலையில் தமிழ்ப்பண்டிதராகி, அந்நிய பாஷைகள் ஆயிரங்கற்று நிகரில் புலவர் சிகரமாக விளங்கிய சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதிய நூல்கள் ஏதேனும் ஒன்றை எப்போதாவது தலையணையாக வைத்துப்படுத்திருந்ததுண்டா ? அல்லது அவர் புத்தகங்கள் வைத்திருந்த அலமாரியை மோந்து பார்த்ததுண்டா ? அப்படி மோந்து பார்த்தவர்களையேனும் மோந்து பார்த்ததுண்டா ? ” என்று கிண்டலாகக்கேட்கிறார் பாரதியார். அது மட்டுமல்ல. நீராருங்கடலுடுத்த என்னும் பாட்டில் நிலமடந்தைக்கு திராவிடத்திலகமாக வைத்திருக்கும் உருவகத்தை ' தென் பாண்டி நாட்டிலே, பூமி தேவிக்கு திலகம் வைத்து அது உலர்ந்து போயிருப்பது போலக்கவுண்டபுரம் என்ற நகரம் திகழ்ச்சி பெற்றது.' என்றும் சொல்லிக்கிண்டல் செய்திருக்கிறார் சுப்பிரமணிய பாரதியார். எனவே, தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை இயற்றியது மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை என்பது தவறானக்கருத்தாகும். அவர் இயற்றியதோ தமிழ்த்தெய்வ வணக்கம் ஆகும். ஆனால், பரி, நரியாகிய கதையாக இந்தத்தமிழ் தெய்வ வணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றப்பட்டது. இப்படி, கருத்துப்பிழைகள் நிரம்பிய ஒரு தமிழ்த்தாய் வாழ்த்தை 1970-ல் அந்நாளைய முதல்வராக இருந்த திரு. மு. க. கருணாநிதி , தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற பாடலாக அறிமுகப்படுத்திய போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இரண்டு பேர். ஒருவர், தமிழ்த்தாத்தா உ.வே. சா.வின் மாணவர் வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன் அவர்கள். மற்றொருவர், கவியரசு கண்ணதாசன். இந்த இரண்டு பேருமே தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பெயரில் ' நீராருங்கடலுடுத்த நிலமடந்தை...' எனும் பாடலை மிகக்கடுமையாக எதிர்த்தார்கள். அத்தகைய தமிழறிஞர்களின் எதிர்ப்புகளையெல்லாம் பொருட்படுத்தாது , அந்நாளைய தமிழக அரசு இந்த சுந்தரம் பிள்ளையின் பாடலை அரசுப்படலாக அறிவித்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X