'ஒரே நாடு, ஒரே தேர்தல்' வரப்போகுது; இரண்டரை ஆண்டுதான் திமுக ஆட்சி: எடப்பாடி ஆரூடம்

Updated : டிச 17, 2021 | Added : டிச 17, 2021 | கருத்துகள் (57)
Advertisement
சேலம்: சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, 'ஒரே நாடு, ஒரே தேர்தல் வரப்போவதாகவும், இன்னும் இரண்டரை ஆண்டுதான் தி.மு.க ஆட்சி இருக்கும்' எனவும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான
Tamilnadu, ADMK, EPS, Palanisamy, தமிழகம், அதிமுக, பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி, இபிஎஸ்

சேலம்: சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, 'ஒரே நாடு, ஒரே தேர்தல் வரப்போவதாகவும், இன்னும் இரண்டரை ஆண்டுதான் தி.மு.க ஆட்சி இருக்கும்' எனவும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பழனிசாமி பேசியதாவது: சேலம் என்றால் அது அ.தி.மு.க.,வின் கோட்டை. எம்.ஜி.ஆரின் காலத்திலும் சரி, ஜெயலலிதாவின் காலத்திலும் சரி, இப்போதும் சரி, சேலம் எப்போதும் அ.தி.மு.க.,-வின் கோட்டை. அ.தி.மு.க-.,வை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது. எங்களை யாராலும் அசைக்க முடியாது. ஏன் ஒரு தொண்டனை கூட தொட்டு பார்க்கமுடியாது. அ.தி.மு.க.,வினரை பழிவாங்க நினைத்தால், அதையும் எதிர்கொள்ள நாங்கள் தயார். ரெய்டு நடத்தினால் நாங்கள் பயந்துவிடுவோமா? எங்கள் ரத்தத்தில் வீரம் ஊறியிருக்கிறது.


ஆட்சி மாறினால் காட்சி மாறும் இபிஎஸ் எச்சரிக்கை | Edappadi K.Palaniswami | AIADMK | Dinamalar

latest tamil news



தி.மு.க அரசின் மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். அ.தி.மு.க.,வினர் மீது எத்தனை வழக்கு போட்டாலும் நாங்கள் அஞ்சப்போவதில்லை, எதனையும் சட்ட ரீதியாக சந்தித்து வெல்வோம். சென்னை கன மழையால் மிதந்தபோது, முதல்வர் மு.க.ஸ்டாலின் திரைப்படத்தில் வருவதுபோல நடந்தார், போஸ் கொடுத்தார், டீ குடித்தார், பின்னர் போய்விட்டார். 'அம்மா' சிமெண்டை விலையை ஏற்றி 'வலிமை' சிமெண்ட் என்று கொடுக்கிறார்கள். வலிமை சிமெண்டாம், நாங்க என்ன வலிமை இல்லாத சிமெண்டா கொடுத்தோம்?. இன்னும் இரண்டரை ஆண்டுகள் தான் தி.மு.க ஆட்சி இருக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார். அதனை ஸ்டாலின் நினைவில் கொள்ள வேண்டும். அ


latest tamil news


கடந்த ஆண்டு எங்கள் ஆட்சியில் வழங்கியது போல் அடுத்த ஆண்டும் பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2500 வழங்க வேண்டும். தி.மு.க அரசு தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் 500-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கினார்கள். ஆனால் இன்று வரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இது தொடர்பாக அ.தி.மு.க பலமுறை குரல் கொடுத்தும் விடியாத அரசு செவி சாய்க்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
17-டிச-202123:28:49 IST Report Abuse
Arachi கொள்கை அளவில் கட்சிகளை அதாவது சித்தாந்தாத்தை புகுத்தும் அடிப்படையில், அரசியல் மூலம் தனது மூலதனத்தை பெருக்கி கொள்வது மற்றொன்று எல்லாமும் எல்லா மக்களுக்காக தன்னலம் பார்க்காது அரசியலைப் பயன்படுத்துவது என மூன்று வகையாகப் பிரிக்கலாம் அதாவது முதல் இரண்டு வகைகளும் முற்போக்குமல்ல பிற்போக்குமல்ல புறம்போக்கு கட்சிகள்.
Rate this:
Cancel
17-டிச-202123:21:03 IST Report Abuse
முருகன் பதவி ஆசை. கனவிலும் ஆட்சிக்கு வர முடியாது என்பதே உண்மை
Rate this:
Cancel
17-டிச-202121:02:31 IST Report Abuse
kulandai kannan ஸ்டாலின் காதுகளில் புகை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X