புதுடில்லி :இந்தியாவில் 'ஒமைக்ரான்' தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது. இதில் மஹாராஷ்டிர மாநிலத்தில் 32 பேருக்கும், டில்லியில் 22 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தேவையற்ற பயணங்கள், பெரும் கூட்டங்களை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நம் அண்டை நாடான சீனாவில் 2019 டிசம்பரில் முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின் தொற்றின் முதல் அலை மற்றும் இரண்டாவது அலைகளால் உலகின் பல நாடுகளும் பாதிக்கப்பட்டன.
தொற்று பரவியுள்ளது.
முதல் மற்றும் இரண்டாவது அலை பாதிப்பிலிருந்து இந்தியா மீண்டு வருகிறது. இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் சமீப காலமாக பரவி வருகிறது. இதற்கு ஒமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது.தென் ஆப்ரிக்காவிலிருந்து தற்போது பல நாடுகளுக்கும் பரவி ஒமைக்ரான் தன் ஆட்டத்தை துவக்கியுள்ளது. தற்போது 91 நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது.நம் நாட்டில் கர்நாடகா மாநிலத்தில் தான் முதலில் ஒமைக்ரான் தொற்று பரவியது.
தற்போது நாடு முழுதும் 11 மாநிலங்களில் 101 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால் நேற்று கூறியதாவது: கடந்த 20 நாட்களாக 10 ஆயிரத்திற்கும் குறைவாகவே நம் நாட்டில் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் பாதிப்படைவோர் விகிதம் 0.65 சதவீதமாக உள்ளது. நாடு முழுதும் தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கையில் கேரளாவில் மட்டும் 40.31 சதவீதம் பேர் உள்ளனர்.
10 மாநிலங்கள்
உலகிலேயே மிக அதிக விகிதத்தில் கொரோனா தடுப்பூசி 'டோஸ்'களை செலுத்திய நாடாக இந்தியா உள்ளது. தினசரி செலுத்தப்படும் டோஸ்களின் விகிதம் அமெரிக்காவில் செலுத்தப்படும் டோஸ்களின் விகிதத்தை விட 4.8 மடங்கு அதிகமாகவும், பிரிட்டனை விட 12.5 மடங்கு அதிகமாகவும் உள்ளது.
தற்போது டெல்டா வைரசை விட ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 1௦ மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மஹாராஷ்டிராவில் 32 பேர், டில்லியில் 22 பேர், ராஜஸ்தானில் 17 பேர், கர்நாடகா, தெலுங்கானாவில் தலா எட்டு பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
குஜராத், கேரளாவில் தலா ஐந்து பேர்; ஆந்திரா, தமிழகம், மேற்கு வங்கத்தில் தலா ஒருவர், ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். யூனியன் பிரதேசமான சண்டிகரில் ஒருவர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.உலக அளவில் பிரிட்டன், டென்மார்க், நார்வே, தென் ஆப்ரிக்க நாடுகளில் தான் ஒமைக்ரான் பரவல் அதிவேகமாக உள்ளது. பிரிட்டனில் ஒரே நாளில் 11 ஆயிரத்து 708 பேருக்கும், டென்மார்க்கில் 9,009 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
யூனியன் பிரதேச அரசு
தடுப்பூசி ஆற்றலை ஒமைக்ரான் மீறுகிறதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் தடுப்பூசி மட்டுமே இந்த தொற்றை சமாளிக்க போதுமானதாக இருக்காது. அதனால் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா தடுப்புக்கான சிறப்புக் குழுவின் தலைவர் டாக்டர் வி.கே.பால் கூறியதாவது:ஒமைக்ரான் தொற்றிலிருந்து தப்பிக்க தேவையற்ற பயணங்கள், பெரும் கூட்டங்கள், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.தொற்று பாதிப்பு 5 சதவீதத்துக்கு மேல் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். குறைந்தது ௧௫ நாட்களுக்காவது கட்டுப்பாடுகள் விதிப்பதுநல்லது.இவ்வாறு அவர் கூறினார்.
ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது பற்றியும் மத்திய சுகாதாரத் துறை ஆலோசித்து வருவதாக தெரிகிறது. எனினும் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் பகுதிகளில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை முதல்கட்டமாக கேட்டுக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE