'மண்புழு விஞ்ஞானி' முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில்: நான் சுற்றுச்சூழல் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த காலத்தில், காடுகள் அழிக்கப்படுவது விவாதப் பொருளானது. அதைத் தொடர்ந்து, ஒரு பக்கம், 'காடுகளை வளர்ப்போம்' என்ற முழக்கத்துடன் அரசும், தொண்டு நிறுவனங்களும், 'யூகலிப்டஸ்' எனப்படும் தைல மரங்களைப் பரவலாக நட துவங்கின.மறுபக்கம், சில தனியார் நிறுவன ஆட்கள், 'உங்களுக்காக தேக்கு மரங்களை நாங்கள் வளர்த்துத் தருகிறோம்; அவை வளர்ந்த பின், கொள்ளை லாபம் கிடைக்கும்' என்று மக்களிடம் பணம் வசூலிக்கத் துவங்கினர்.
இந்த முயற்சிகள் அனைத்தும், காடு வளர்ப்பு என்ற லட்சியத்தை எட்ட உதவவில்லை. இது ஒருபுறமிருக்க, 'விதைப் பந்துகள் மூலம் ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் மரங்களை நடுகிறோம். 'மியாவாகி' முறை மூலம் குறைந்த இடத்தில், குறுகிய காலத்தில் காடுகளை உருவாக்குகிறோம்' என இளைஞர் பட்டாளம் கிளம்பியுள்ளதையும்நாம் கவனமாகப் பார்க்க வேண்டிஉள்ளது.களிமண், சாணம் ஆகியவற்றைக் கலந்து, அதில் விதைகளைப் போட்டு விதைப் பந்துகளை உருவாக்குகின்றனர். இயற்கையாக மட்கும் தன்மையுள்ள குப்பையை மண்ணில் புதைத்து, நெருக்கமாக மரங்களை நடுகின்றனர். அவை சூரிய ஒளிக்குப் போட்டி போட்டு வளர வேண்டும். 'தக்கது தப்பிப் பிழைக்கும்' என்ற டார்வினின் தத்துவம் தான், மியாவாகி முறையின் அடிப்படை!மாநகரங்களில் இடப்பற்றாக்குறையால், மியாவாகி முறைப்படி காடுகள் வளர்ப்பதை ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். பல லட்சக்கணக்கான ஏக்கரில் புறம்போக்கு நிலங்களும், தரிசு நிலங்களும் உள்ளன. இவை பயன்படுத்தப்படாத நிலங்களே தவிர, பயனற்ற நிலங்கள் அல்ல. இங்கெல்லாம் மரம் நடலாமே!தமிழகத்தில் பசுமைப் போர்வை, ௨௪ - ௨௬ சதவீதமாக இருக்கிறது.
33 சதவீதமாக அதை உயர்த்த அரசும், பல நிறுவனங்களும் மெனக்கெடுகின்றன. செயற்கைக்கோள் புகைப்படங்களில் பச்சையாகத் தெரியும் பரப்பை அதிகரித்து விட்டால், காடுகளை வளர்த்து விட்டதாகக் கருதலாம் என நினைத்துக் கொள்கின்றனர். அதற்காகசவுக்கையும், தேக்கையும் வளர்த்தால், சூழலியல் சமநிலை பாதிக்கப்படும்.குறிப்பிட்ட பகுதி யின் மண்ணுக்கு உகந்த உள்ளூர் மரங்களை வளர்த்தால், அவற்றின் உதிர்வுகள் வேர் சுரப்பு, மண்புழுக்கள், மரவட்டைகள், பூரான்கள், நுண்கணுக்காலிகள், நுாற்புழுக்கள், நுண்ணுயிர்கள் வளரவும், மண் உயிர்ப்புடன், நலமுடன் இருக்கவும் உதவும்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement