மத்தியில் ஊழலற்ற ஆட்சி: அமித் ஷா பெருமிதம்

Updated : டிச 19, 2021 | Added : டிச 17, 2021 | கருத்துகள் (24) | |
Advertisement
புதுடில்லி : ''மத்தியில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சியை பிரதமர் மோடி அளித்து வருகிறார்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதத்துடன் கூறினார்.இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் 94வது ஆண்டு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா பேசியதாவது:நாடு சுதந்திரம் அடைந்து ௭௫ ஆண்டு
மத்தியில் ஊழலற்ற ஆட்சி: அமித் ஷா பெருமிதம்

புதுடில்லி : ''மத்தியில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சியை பிரதமர் மோடி அளித்து வருகிறார்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதத்துடன் கூறினார்.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் 94வது ஆண்டு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.

இதில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா பேசியதாவது:நாடு சுதந்திரம் அடைந்து ௭௫ ஆண்டு நிறைவு பெற உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாகத் தான், ஒரு ஊழல் புகார் கூட இல்லாத அரசை மக்கள் பார்த்து வருகின்றனர். சிறிதும் ஊழலற்ற ஆட்சியை பிரதமர் மோடி தந்து உள்ளார்.


நாங்கள் பல முடிவுகளை எடுத்துள்ளோம். அதில் ஒன்றிரண்டு தவறாக இருக்கலாம். ஆனால், எந்த தவறான நோக்கத்திற்காகவும் எந்த முடிவும் எடுக்கப்பட்டதில்லை.
மக்கள் மற்றும் நாட்டு நலனை நோக்கமாக வைத்தே அனைத்து முடிவுகளையும் எடுத்துள்ளோம்; எடுப்போம்.

நாட்டில் 2014க்கு முன் வரை 60 கோடிக்கும் அதிகமான மக்கள் வங்கி கணக்கு, மின்சார வசதி, காஸ் இணைப்பு மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல் இருந்தனர். இவர்களுக்கு இந்த வசதியை மோடி அரசு தான் ஏற்படுத்தி கொடுத்தது. இதன் வாயிலாக அவர்களுக்கும் நாட்டின் வளர்ச்சியில் நம்பிக்கை ஏற்பட்டது.பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான தலைமை பண்பு மற்றும் 130 கோடி மக்களின் பங்களிப்பால் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டை 50 ஆண்டு களுக்கு மேல் ஆட்சி செய்த கட்சி, நான்கு அல்லது ஐந்து முக்கிய முடிவுகளை தான் எடுத்தது. ஆனால், மோடி தலைமையிலான அரசு ஏழு ஆண்டுகளில் 50 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
18-டிச-202121:16:19 IST Report Abuse
Tamilan மத்தியில் ஊழல் நடக்கவில்லை என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். இவர்கள் அடிக்கவில்லையெனில் ஒவ்வொரு அமைச்சரையும் தங்கள் கும்பல் மூலம் கொள்ளையடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒருசிலர் சட்டபூர்வமான கார்போரேட்டுகள் மூலம். வேறு சிலர் சட்டதுக்குபுறம்பான கொள்ளையர்கள் மூலம். அனைத்தும் சட்டத்தில் இவர்கள் ஆட்சியில் உள்ளவர்களின் மூலம் மட்டுமே நடக்கிறது என்பது உண்மையே. ஐவரும் மோடியும் இருவர் மட்டும் சுத்தமாக இருந்தால் பத்தாது. அரசு, அரசு எந்திரங்கள், அரசியல் அமைப்புகள் சுத்தமாக இருக்கவேண்டும். தனக்கு கீழ் உள்ள CBI , இவர்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பின் எத்தனைபேர் மீது காழ்ப்புணர்ச்சியுடன் ஏவிவிடப்பட்டுள்ளது. எத்தனையோ பேரை கொள்ளையடிப்பது தெரிந்தும் சும்மா விட்டிருக்கிறார்கள் ?. அது இவருக்கு தெரியவில்லையெனில், இவர் பதவியில் இருக்க தகுதியற்றவர் .
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
18-டிச-202119:41:46 IST Report Abuse
sankaseshan யானை போகும்போது பின்னாலே நாய்கள் குறைத்து கொண்டு போகும் யானை திரும்பி பார்த்தால் பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் எடுக்கும்
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
18-டிச-202118:12:41 IST Report Abuse
amuthan இதை சொல்ல தைரியம் வேண்டும். மனசாட்சி இருக்க கூடாது. ரஃபேல் ஊழல், கன்டெய்னர் பணம் என்ன ஆச்சு. எழைகள் கணக்கில் இருந்து பிடுங்கிய பணம் கார்பரேட் வியாபாரிகள் கடன் தள்ளுபடி , பணம் மதிப்பு இழப்பின் போது வராத பணம், கூட்டி பார்த்தால் பல லட்சம் கோடி. ஊழலின் எண்ணிக்கை குறைவு.
Rate this:
selva - Chennai,இந்தியா
20-டிச-202110:32:52 IST Report Abuse
selvaவரி வாரி வாரி வரி.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X