'டிஜிட்டல் கரன்சி' அறிமுகம் ரிசர்வ் வங்கி தீவிரம்

Updated : டிச 19, 2021 | Added : டிச 17, 2021 | கருத்துகள் (6)
Advertisement
மும்பை : இந்திய ரூபாய்க்கு நிகரான 'டிஜிட்டல் கரன்சி'யை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி தீவிரமாக பரிசீலித்து வருகிறது.மும்பையில் நேற்று, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிர்வாக குழு கூட்டம் நடந்தது. இதில், 'சி.பி.டி.சி.,' எனும் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி வெளியீடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்க
'டிஜிட்டல் கரன்சி, அறிமுகம் ,ரிசர்வ் வங்கி தீவிரம்

மும்பை : இந்திய ரூபாய்க்கு நிகரான 'டிஜிட்டல் கரன்சி'யை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

மும்பையில் நேற்று, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிர்வாக குழு கூட்டம் நடந்தது. இதில், 'சி.பி.டி.சி.,' எனும் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி வெளியீடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.


மேலும், நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்க வாய்ப்புள்ள 'கிரிப்டோகரன்சி' எனும் மெய்நிகர் நாணயங்களின் புழக்கம் பெருகி வருவது குறித்து கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் பொருளாதார நிலவரம், உருவெடுத்து வரும் சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, 'கிரிப்டோகரன்சி' எனும் மெய்நிகர் நாணயங்களுக்கான சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் காரணமாக, இந்திய ரூபாய்க்கு நிகரான டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவதில் ரிசர்வ் வங்கி தீவிரமாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
18-டிச-202122:17:50 IST Report Abuse
Priyan Vadanad யாருடைய வளர்ச்சிக்கு? புது நண்பர்கள் கிடைத்துவிட்டார்களோ? சுருட்டிய பணத்தை பதுக்கவோ?
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
18-டிச-202118:46:13 IST Report Abuse
Priyan Vadanad பயமா இருக்கு. மக்கள் பணத்தை எப்படி புடுங்கலாம் என்று தீவிரமாய் சிந்திக்கிறார்களோ வங்கியில் போடுகிற பணத்துக்கே இப்ப உத்தரவாதம் இல்லை. அப்படியே போட்டாலும் நமது பணத்தை நாம் எடுக்குமுன்னாலே அது கரைந்துதான் கையில கிடைக்கிறது.
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
18-டிச-202113:27:25 IST Report Abuse
Rengaraj ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சி வெளியிடுவதில் தவறில்லை. அதை முறைப்படுத்துவதில் தான் பிரச்சினை. டிஜிட்டல் கரன்சியின் பயன்பாடு பற்றி மக்களுக்கு சந்தேகம் அற்ற புரிதல் வேண்டும். எந்தெந்த பரிமாற்றங்களுக்கு அதை பயன்படுத்தலாம் என்று ஒரு நெறிமுறை வேண்டும். அதன் சந்தை சார்ந்த மதிப்பு, வருமான வரி சட்டங்களுக்கும் உட்படுத்த வேண்டும். வங்கி கணக்குடன் ஆதார் நம்பர், மொபைல் நம்பர் ர், வருமான வரி கணக்கு நம்பர் பாஸ் போர்ட் நும்பர், நிறுவன இயக்குனர் நம்பர், ஜி. எஸ். டீ இவை அனைத்தும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அணைத்து வங்கிகளும் இதன் மீதான பரிமாற்ற அறிக்கையை ரிசர்வ் வங்கிக்கு ஒவ்வொரு மாதமும் அல்லது இரண்டு வார இடைவெளியில் சமர்ப்பிக்க வேண்டும். பங்குச்சந்தையுடன் இந்த பரிமாற்றத்தை இணைக்க கூடாது. ரிசர்வ் வங்கி மட்டுமே இதன் பரிமாற்றத்தை அங்கீகரிக்க வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் இந்த டிஜிட்டல் கரன்சி விரைவான பரிமாற்றத்துக்கு உபயோகமாக இருக்கும். வியாபார பணப்பரிமாற்றம், சொத்து விற்பனை இவற்றை துல்லியமாக கண்டறியுமாறு பரிமாற்ற நடைமுறை இருக்க வேண்டும். ஊழல் பணத்தை டிஜிட்டல் கரன்சியில் மாற்றிவிடாத வண்ணம் அரசின் மேற்பார்வை இருக்க வேண்டும். அறிமுக படுத்தும் சமயம் தனி நபர்கள் இதை பயன்படுத்தாத வண்ணம் செய்ய வேண்டும். அரசு, மற்றும் நிறுவனங்கள் குறிப்பாக கம்பெனி சட்டத்தில் பதிவு செய்யப்பட்டவை மட்டுமே ஈடுபட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X