மேகதாது அணைக்கு எதிராக மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

Updated : டிச 19, 2021 | Added : டிச 17, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இந்நிலையில் மேகதாது அணையை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஒருவர்
மேகதாது அணை, மனு: உச்ச நீதிமன்றம் , தள்ளுபடி

புதுடில்லி மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இந்நிலையில் மேகதாது அணையை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் முறையிட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:கர்நாடக அரசின் மேகதாது திட்டம் ஒரு மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவு திட்டம். காவிரி கரையோர வனவிலங்கு சரணாலயம் மற்றும் அதை ஒட்டிய வனப் பகுதியை இது மொத்தமாக மூழ்கடித்துவிடும்.கரையோரத்தில் உள்ள சரணாலயத்தில் அழிந்து வரும் பல உயிரினங்கள் உள்ளன; யானை வழித்தடங்களும் உள்ளன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஏராளமான வன உயிரினங்கள் அழிந்துவிடும். எனவே இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது.
இது தொடர்பான விபரங்களை மத்திய அரசுக்கும், தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகளுக்கும், அறிக்கையாக அனுப்பி வைத்தேன். எனினும் அதற்கு எந்த பதிலும் எனக்கு கிடைக்கவில்லை.இதேபோல், மேகதாதுவில் இருந்து, 30 கி.மீ., தொலைவில் உள்ள ராசிமணல் பகுதியில் அணை கட்ட, மத்திய அரசுக்கும், தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கான்வில்கர் மற்றும் ரவிகுமார் அடங்கிய அமர்வு முன் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, பல்வேறு அதிகாரிகளுக்கு மனுதாரர் அறிக்கையாக விபரங்களை அனுப்பி வைத்துள்ளார். அவற்றை விரைந்து பரிசீலிக்க அதிகாரிகளை மனுதாரர் மீண்டும் நினைவுபடுத்தலாம்.மனுதாரரின் கோரிக்கையை ஏற்று அவருக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் தர வேண்டும். அடுத்த மூன்று மாதங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.
இதேபோல் அணையை கட்டுவது குறித்து நீதிமன்றத்தால் முடிவு எடுக்க முடியாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் அதை முடிவு செய்ய வேண்டும். அவர்கள் எடுக்கும் முடிவு சட்டவிரோதமாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே நாங்கள் அதில் தலையிடுவோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து அந்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
18-டிச-202110:02:29 IST Report Abuse
duruvasar ஹேமாவதி அணை கட்ட முழு ஒத்துழைப்பை தந்தை கொடுத்ததை பின்பற்றி மேகதாது அணைக்கு பிள்ளை மனதார ஒத்துழைப்பு தருவாரு அப்பு. உங்க நம்பிக்கையை நிறைவேற்றுவார்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-டிச-202108:09:40 IST Report Abuse
Kasimani Baskaran தமிழகத்தில் ஒரு ரோடு போட்டாலேயே சமூக ஆர்வலர்கள் துள்ளிக்குதிப்பார்கள் - அணை என்றால் அத்தனை சமூக ஆரவலர்களும் இணைந்து போராட்டமே ஆரம்பிப்பார்கள். நல்ல வேளை காமராஜர் ஆட்சியில் இதுபோன்ற கருமாந்திரங்கள் இல்லை.
Rate this:
Cancel
18-டிச-202107:10:33 IST Report Abuse
அப்புசாமி கொஞ்சம் கொஞ்சமாக கை கழுவ தயாராகுறாங்களோன்னு தோணுது. எப்படியும் அணை கட்டப்பட்டு விடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X