5 மாத குழந்தைக்கு தசை நார் சிதைவு ஊசி மருந்துக்கு ரூ.16 கோடி தேவை

Added : டிச 17, 2021 | கருத்துகள் (6)
Advertisement
திருப்போரூர் :தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தையை காப்பாற்ற தேவையான மருந்துக்கு, 16 கோடி ரூபாய் தேவைப்படுவதால், நாவலுாரைச் சேர்ந்த பெற்றோர் தவிக்கின்றனர்; மத்திய - மாநில அரசுகள் உதவ வேண்டும் என, கண்ணீர் வடிக்கின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த நாவலுாரைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ், 30; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஜெனிபர், 27.இவர்களுக்கு,
 5 மாத குழந்தை, தசை நார் சிதைவு ஊசி மருந்துக்கு ரூ.16 கோடி தேவை

திருப்போரூர் :தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தையை காப்பாற்ற தேவையான மருந்துக்கு, 16 கோடி ரூபாய் தேவைப்படுவதால், நாவலுாரைச் சேர்ந்த பெற்றோர் தவிக்கின்றனர்; மத்திய - மாநில அரசுகள் உதவ வேண்டும் என, கண்ணீர் வடிக்கின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த நாவலுாரைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ், 30; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஜெனிபர், 27.இவர்களுக்கு, இரட்டை பிறவியாக ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்தன.மரபணு பாதிப்புஇதில், 5 மாத ஆண் குழந்தை, இரண்டு மாதங்களாக கால்களை அசைக்காமல் இருந்தது.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பரிசோதனைக்கு பின், பெங்களூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில், குழந்தைக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.அதில், மரபணு பாதிப்பால் ஏற்படும் 'எஸ்.எம்.ஏ., டைப் - 1' என்ற தசை நார் சிதைவு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.இது குறித்து ஆண்ட்ரூஸ் கூறியதாவது:வசதிகள் ஏதும் இல்லாத சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். மாத சம்பளத்தில் வேலை பார்க்கிறேன்; மனைவி வீட்டை கவனித்து கொள்கிறார்.குழந்தைக்கான ஊசி மருந்து மட்டும், 16 கோடி ரூபாய் என்கின்றனர்.

அது தவிர மருந்து செலவு இருக்கிறது.என்ன செய்வது என்று தெரியவில்லை. குழந்தையை காப்பாற்ற, மத்திய - மாநில அரசுகள் மற்றும் பொதுமக்கள் உதவ வேண்டும்.இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.உயிருக்கு ஆபத்து'மிகவும் அரிதான இந்நோய்க்கான மருந்தை, வெளிநாட்டில் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும்.'ஊசி மருந்தின் விலை 16 கோடி ரூபாய். 2 வயதுக்குள் செலுத்தா விட்டால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து' என, மருத்துவர்கள் தெரிவித்தனர்.மேலும் விபரங்கள் மற்றும் உதவிக்கு, ஆண்ட்ரூசை, 90030 99823, 73054 11803 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
19-டிச-202101:46:26 IST Report Abuse
thonipuramVijay இந்நோய் ஏன் வருகிறது , இந்த தாய் தந்தைக்கு உடம்பில் என்ன குறை ? அதை திருமணத்துக்கு முன்பே தெரிந்துகொள்ள பரிசோதனை இருப்பதாக அறிகிறேன், எனவே இனி திருமணத்திற்கு முன் அல்லது குழந்தை பெற ஆலோசிப்பதற்கு முன் பரிசோதனை செய்து கொள்வது நல்லது , இந்நோய் வருவதை தடுக்காமல் பலர் இப்படி பதினாறு கோடி கேட்டால் எங்கே போவது , மற்றும் உலக சுகாதார மய்யம் இந்த மருந்தை குறைந்தவிலைக்கு கிடைக்க வழிசெய்யவேண்டும்
Rate this:
Cancel
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
18-டிச-202119:51:48 IST Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan புதுசா ஒண்ணு பெத்துக்க வேண்டியதுதான்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
18-டிச-202118:19:09 IST Report Abuse
அசோக்ராஜ் ஹவாலா, மணி லாண்டரிங் இவை புதுப்புது அவதாரங்கள் எடுக்கும். சக்திகாந்தத்துக்கே வெளிச்சம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X