மதுரையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள்தியேட்டர், பொழுதுபோக்கு இடங்கள், பள்ளி, கல்லுாரிகள், விளையாட்டு மைதானங்கள், உணவு, தங்கும், கேளிக்கை விடுதிகள், திருமண மண்டபங்கள், சந்தைகள், பஸ்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், ஜவுளி, நகை கடைகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழில், வர்த்தக நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் வருகை பதிவேடு பராமரித்து,தடுப்பூசி செலுத்தியோர் தகவலை பதிவு செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்தாதோர் வரும் பட்சத்தில் செலுத்த அறிவுறுத்த வேண்டும்.உறுதி செய்த பிறகே பொது இடங்களில் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள், பணியாளர்கள் என அனைவரும் முககவசம், சமூக இடைவெளி, கிருமிநாசினியால் கைகழுவுதல் உள்ளிட்ட தடுப்பு நெறிமுறைகள் பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாததற்காக 165 நிறுவனங்கள் மீது கண்காணிப்பு குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement