கம்பம் : கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் கோழி, முட்டை, இறைச்சி கொண்டுவர தடை விதித்து கம்பம் மெட்டு, குமுளி சோதனைச்சாவடிகளில் கால்நடை பராமரிப்பு துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன் பறவைக் காய்ச்சல் பரவி கோழிகள், வாத்துகள் அதிகம் இறந்தன. அங்கு பறவை காய்ச்சல் பரவலை தொடர்ந்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழக - கேரள எல்லைப்பகுதிகளான கம்பம்மெட்டு, குமுளி சோதனைச் சாவடிகளில் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை நேற்று காலை முதல் கண்காணிப்பு மேற்கொண்டுள்ளது. கேரளாவில் இருந்து கோழிகள், வாத்து, கோழி இறைச்சி, முட்டை கொண்டு வர தடை விதித்துள்ளனர்.

இத்தடை நேற்று முதல் 90 நாட்களுக்கு நீடிக்கும் என மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் சுப்பையா பாண்டியன் தெரிவித்தார். அதேசமயம் தமிழகத்தில் இருந்து கோழிகள், முட்டைகள் கேரளாவிற்கு கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE