மதுரை நகர வளர்ச்சி குழுமம் உருவாக்க அரசாணை வெளியீடு

Updated : டிச 18, 2021 | Added : டிச 18, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை : மதுரை நகர வளர்ச்சி குழுமத்தை உருவாக்குவதற்கான விதிகள் அடங்கிய அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் போல, பிற நகரங்களில் புதிய பெருநகர் வளர்ச்சி குழுமங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வந்தது. இதன் அடிப்படையில், கோவை, திருப்பூர், மதுரை, ஓசூர் பகுதிகளில், புதிய நகர வளர்ச்சி குழுமங்கள்


சென்னை : மதுரை நகர வளர்ச்சி குழுமத்தை உருவாக்குவதற்கான விதிகள் அடங்கிய அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் போல, பிற நகரங்களில் புதிய பெருநகர் வளர்ச்சி குழுமங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வந்தது.



latest tamil news



இதன் அடிப்படையில், கோவை, திருப்பூர், மதுரை, ஓசூர் பகுதிகளில், புதிய நகர வளர்ச்சி குழுமங்கள் ஏற்படுத்தப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.இதன் அடிப்படையில், முதற்கட்டமாக, கோவை நகர வளர்ச்சி குழுமம், திருப்பூர் நகர வளர்ச்சி குழுமங்களை ஏற்படுத்துவதற்கான விதிகள் அடங்கிய அரசாணை, கடந்த மாதம் பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, புதிய நகர வளர்ச்சி குழுமங்களுக்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.இந்த வகையில், மதுர நகர வளர்ச்சி குழுமம் அமைப்பதற்கான அரசாணையை, தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை பிறப்பித்துள்ளது. புதிய குழுமத்துக்கான அடிப்படை விதிகள், இதில் இடம் பெற்றுள்ளன.


latest tamil news



தற்போதைய நிலவரப்படி, மதுரை நகரம் என வரையறுக்கப்பட்டுள்ள, 147.97 சதுர கிலோ மீட்டர் புதிய நகர வளர்ச்சி குழுமத்தின் அடிப்படை பரப்பளவாக இருக்கும். இங்கு ஏற்படும் நகர்ப்புற வளர்ச்சியை முறைப்படுத்த நகர வளர்ச்சி குழுமம் உதவும்.வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலர் இதன் தலைவராகவும், மதுரை மாவட்ட கலெக்டர் துணை தலைவராக இருப்பார்.

முழுநேர உறுப்பினர் செயலர் தமிழக அரசால் நியமிக்கப்படுவார்.நிதி, போக்குவரத்து, தொழில், பொது பணி, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகள், இதன் உறுப்பினர்களாக இருப்பார்கள். நகரமைப்பு துறை இயக்குனர், வீட்டுவசதி வாரியம், நகர்ப்பு வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர்கள் உறுப்பினர்களாக இருப்பர்.

இந்த அமைப்புக்கு உதவ ஆலோசனை குழு, திட்ட குழு ஆகியவை தனித்தனியாக அமைக்கப்படும்.இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
18-டிச-202115:43:09 IST Report Abuse
Kumar ரோடா இருக்கு மதுரையில். எங்க பார்த்தாலும் அபாயக் குழி தான் இருக்கு. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
18-டிச-202115:08:34 IST Report Abuse
SUBBU, MADURAI உள்ள ரோட்டை உருப்படியா போடுங்க மொதல்ல.
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
18-டிச-202111:39:43 IST Report Abuse
Rengaraj மதுரை நகரில் கழிவு நீர், குடி நீர் ,குழாய்கள், பாதாள சாக்கடை செல்லும் வழிகள் , அடைப்பு இருப்பின் அதை உடனே கண்டறியும் முறை , குப்பை அகற்றும் பணிகள் , இவற்றின் பராமரிப்பு , சாலை ஆக்கிரமிப்பு , எல்லாம் மோசமாக உள்ளது. மழை நீர் தேங்காமல் எந்த ரோடும் இருப்பதில்லை. ,(காளவாசல் பை பாஸ் ரோடு உட்பட ) . பெருநகர வளர்ச்சி குழு இதை ஒழுங்காக முறைப்படுத்த வேண்டும். நெரிசல் இல்லாத அளவுக்கு போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும். கூட்டங்கள் போட்டால் மட்டும் போதாது. மக்களுக்கு உடனே தெரியப்படுத்தி நடைமுறை படுத்துவதில் முனைப்பு காட்ட வேண்டும். விதிமீறல்களை கடுமையான அபாரதங்கள் விதிப்பதன் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X