இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்' : பள்ளிச்சிறுமி கொலை கட்டட தொழிலாளி கைது

Updated : டிச 18, 2021 | Added : டிச 18, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
தமிழக நிகழ்வுகள்கார் மோதி மாணவி பலி சிவகங்கை : சிவகங்கை சாஸ்திரி தெரு மணிகண்டன் மகள் சுமித்ரா 16. இவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.நேற்று மாலை 5:15 மணிக்கு டூவீலரில் வீட்டில் இருந்து மதுரை ரோட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிவகங்கையில் இருந்து மதுரை சென்ற கார், டூவீலரில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவி பலியானார்.
தமிழக நிகழ்வுகள்

கார் மோதி மாணவி பலி


சிவகங்கை : சிவகங்கை சாஸ்திரி தெரு மணிகண்டன் மகள் சுமித்ரா 16. இவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
நேற்று மாலை 5:15 மணிக்கு டூவீலரில் வீட்டில் இருந்து மதுரை ரோட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிவகங்கையில் இருந்து மதுரை சென்ற கார், டூவீலரில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவி பலியானார். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் விசாரிக்கிறார்.மணல் கடத்தல் கும்பல் வி.ஏ.ஓ., மீது தாக்கு; 3 பேர் கைது


இளையான்குடி : இளையான்குடி அருகே பெரும்பச்சேரியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் வி.ஏ.ஓ.,வை தாக்கினர். 3 பேர் கைது செய்யப்பட்டனர், டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரும்பச்சேரி வைகை ஆற்றுப் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இளமனுாரைச் சேர்ந்த முனியாண்டி மகன் சுந்தரபாண்டி42,தங்கதுரை மகன் கனக சந்துரு 22,ராமநாதன் மகன் ராமமூர்த்தி28, ஆகிய 3 பேரும் டிராக்டரில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்த போது செல்வம் என்பவரது வயலில் டிராக்டர் பதிந்ததை அடுத்து அவர் போலீசார் மற்றும் பெரும்பச்சேரி வி.எ.ஓ., மணிவண்ணன் ஆகியோருக்கு தகவல் கூறினார்.

அங்கு வந்த போலீசார் மற்றும் வி.ஏ.ஓ., மணிவண்ணன் டிராக்டரை பறிமுதல் செய்து இளையான்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்ற போது மேற்கண்ட 3 பேரும் வி.ஏ.ஓ., மணிவண்ணனிடம் வாக்குவாதம் செய்து அவரை தாக்கியதில் காயமடைந்த அவர் இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் வீட்டிற்கு சென்றார்.இளையான்குடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சுந்தரபாண்டி42, கனக சந்துரு 22, ராமமூர்த்தி28, ஆகிய 3 பேரையும் கைது செய்து டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.பள்ளிச்சிறுமி கொலை கட்டட தொழிலாளி கைது


கோவை;கோவையில் 15 வயது பள்ளிச்சிறுமி கொலை செய்யப்பட்டது தொடர்பாக, கட்டட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.latest tamil news


கோவை சரவணம்பட்டியில், 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு, சடலம் குப்பை மேட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணை நடத்திய போலீசார், சரவணம்பட்டியை சேர்ந்த முத்துக்குமார், 44, என்பவரை கைது செய்தனர்.

கட்டட தொழிலாளியான இவர், தனக்கு நன்கு அறிமுகமான குடும்பத்தை சேர்ந்த சிறுமியை வீட்டுக்கு வரவழைத்து கொலை செய்து, சடலத்தை மறைத்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியின் வீட்டு பீரோவில் இருந்த ஒன்றே முக்கால் சவரன் நகை, 3,000 ரூபாயை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 'போக்சோ', ஆதாயக் கொலை, சடலத்தை மறைத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

கைதான முத்துக்குமாரிடம் விசாரித்து வரும் போலீசார், 'பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தனர்.பர்சில் வைத்திருந்த நகை மாயம்


ராமநாதபுரம் : பரமக்குடி தல்லாகுளம் மேலசத்திரத்தை சேர்ந்தவர் கோயில் பூஜாரி முத்துக்குமார். இவரது மனைவி ராதிகா 35. இவர் நேற்று காலை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி எதிரில் உள்ள ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுத்துள்ளார்.அப்போது அணிந்திருந்த நான்கரை பவுன் செயினை பர்சில் வைத்துள்ளார்.

ஸ்கேன் எடுத்துவிட்டு வந்த போதும் பர்சில் நகை இருந்தது. மதியம் 12:30 மணிக்கு மருத்துவமனை அருகில் உள்ள பஸ்ஸ்டாப்பில் பரமக்குடி செல்ல பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது பர்சை பார்த்த போது நகை இல்லாதது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம். ராமநாதபுரம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.பள்ளி மாணவியிடம் சில்மிஷம்? கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


திருப்பூர்:திருப்பூர் அருகே தனியார் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக எழுந்த புகார் குறித்து, சம்பந்தப்பட்டவரை கைது செய்ய, இரண்டு இடத்தில், மறியல் நடந்தது.


latest tamil news


திருப்பூர், பூலுவபட்டி, சின்னப்புத்துாரில்,ஒரு தனியார் பள்ளி உள்ளது. அதில், ஒன்றாம் வகுப்பு படிக்கும், ஐந்து வயது மாணவியிடம், சில்மிஷம் நடந்ததாக, மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதனால், வடக்கு மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.'பள்ளியின் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடக்கிறது.

சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்,' என போலீசார் கூறினர்.இப்பிரச்னை குறித்து அறிந்த, பொதுமக்கள், பெற்றோர், ஜனநாயக மாதர் சங்கத்தினர் பள்ளியை முற்றுகையிட்டும், பள்ளி முன் ரோட்டில் மறியலும் செய்தனர்.

போலீசார் சமாதானம் செய்தும், மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், மறியல் நீடித்தது.இச்சூழலில், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, பொதுமக்கள் பூலுவட்டி நால் ரோட்டில் நேற்று இரவு, ஆயிரக்கணக்கான மக்கள் மறியல் செய்தனர்.போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த், உதவி கமிஷனர் (வடக்கு) அனில்குமார் ஆகியோர், பேச்சு நடத்தினர்.

தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி, மறியல் தொடர்ந்து நடந்தது. இதனால், பி.என்., ரோட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.விடுதியில் தங்கியிருந்த பெண்கள் கடத்தல்: கொள்ளை கும்பலை தேடும் போலீஸ்கோவை:கோவை விடுதி அறையில் கொள்ளையடித்த கும்பல், அங்கு தங்கியிருந்த பெண்கள் இருவரையும் அரிவாளால் மிரட்டி, கடத்திச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.சரவணம்பட்டி, விநாயகபுரம் அருகே உள்ள ஸ்ரீவெற்றி விநாயகர் நகரில், 'அதிதி சர்வீஸ் அபார்ட்மென்ட்' என்ற பெயரில் விடுதி செயல்படுகிறது.

இதன் மேலாளராக பணியாற்றி வருபவர் ஹரிஹரன், 34. இவர் பணியில் இருந்தபோது, 6 பேர் கொண்ட கும்பல் வந்தது.'சிவக்குமார் என்பவர் தங்கியுள்ளாரா, அவரது அறை எது' என, கேட்டனர். சந்தேகமடைந்த ஹரிஹரன், சிவக்குமாருக்கு போன் செய்து, 'உங்களை பார்க்க சிலர் வந்துள்ளனர்' என தெரிவித்தார்.அதற்கு அவர், 'நான் யாரையும் வரச்சொல்லவில்லை'என பதில் கூறினார்.

இந்நிலையில், தேடி வந்த கும்பலில் ஒருவர், விடுதி மேலாளர் ஹரிஹரனை அரிவாளால் தாக்கி, அறையை காட்டுமாறு மிரட்டினார்.பயந்துபோன ஹரிஹரன், சிவக்குமார் அறைக்கு எதிர் அறையை காட்டினார். அங்கு சென்ற கும்பல், அந்த அறையில் இருந்த பணம் 21 ஆயிரம் ரூபாய், லேப்டாப், மொபைல் போன்கள், ஹார்ட் டிரைவ் டி.வி.ஆர்., 'சிசி டிவி' பாக்ஸ், வைபை ரூட்டர், ஆவணங்கள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஆர்.சி., புத்தகம், ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.


latest tamil news


கிளம்பியபோது, விடுதியில் தங்கியிருந்த பெண்கள் இருவரை பார்த்த கொள்ளையர்கள், அரிவாளை காட்டி மிரட்டி, அவர்களையும் இழுத்துச் சென்று விட்டனர். சம்பவம் பற்றி சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கிடையே, கொள்ளை கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட பெண்கள், தாங்கள் பத்திரமாக வீடு திரும்பி விட்டதாக தெரிவித்துள்ளனர். கொள்ளையர்களை தேடி வரும் போலீசார், விடுதி ஊழியர்கள், அங்கு தங்கியிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.நகை கடையில் திருட்டு:கையாடல் செய்த ஆசிரியர் கைதுபண்ருட்டி:நகை கடையில் கையாடல் செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கோட்லாம்பாக்கம் அரசு துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருபவர் கண்ணன், 51; இவர் பண்ருட்டி கஸ்துாரிபாய் தெருவில் உள்ள எஸ்.ஆர்.ஜே.,நகைக் கடையில் பகுதிநேர ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
ஏப்ரல் மாதத்தில், 103 கிராம் தங்க நகை கணக்கில் வரவில்லை. கண்ணன் கையாடல் செய்தது தெரிந்தது. இது குறித்து நகைக் கடை மேலாளர் விஜயகுமார் அளித்த புகார்படி பண்ருட்டி போலீசார் கண்ணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.5ம் வகுப்பு மாணவி பலி விவகாரம் :நரபலி கும்பலுக்கு தொடர்பு உள்ளதாதிண்டுக்கல்:அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவி தீயில் கருகி இறந்த சம்பவத்தில் நரபலி கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பாச்சலுாரை சேர்ந்தவர் சத்யராஜ். இவரது மகள் பிரித்திகா, 9, அரசு நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்தார். இரண்டு நாட்களுக்கு முன் காலை பள்ளி இடைவேளை நேரத்தில் மாயமானார்.இந்நிலையில் பள்ளி வளாகத்திற்குள் தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது இறந்தார்.

மாணவியின் இறப்பு குறித்து டி.ஐ.ஜி., விஜயகுமாரி, எஸ்.பி., ஸ்ரீனிவாசன் ஆய்வு செய்தனர். மோப்ப நாய், தடயவியல் துறையினர் மூன்று நாட்களாக முகாமிட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பிரேத பரிசோதனைக்கு பின், மாணவிக்கு பாலியல் தொல்லை இல்லை. இறப்புக்கு தீக்காயம்தான் காரணம். அதற்கு மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளது என டி.ஐ.ஜி., தெரிவித்தார்.

தொடர்ந்து தாண்டிக்குடி இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். தற்போது கொடைக்கானல் டி.எஸ்.பி., சீனிவாசன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக பாச்சலுார், செம்பிரான்குளம், கே.சி.பட்டி உட்பட தனியார் எஸ்டேட்களில் கேரளா மற்றும் வட மாநிலத்தவர் பணிபுரிகின்றனர். இவர்களது வருகை, நடவடிக்கை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாணவி இறப்பில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளதா, மாணவியை கும்பல் நரபலி கொடுத்ததா என்ற கோணத்திலும் விசாரணை துவங்கி உள்ளது.பள்ளி வளாகம் அருகே பராமரிப்பின்றி அடர்ந்த தோட்டம், அருகில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

பள்ளிக்கு சுற்றுச் சுவர்கள் இல்லாததால், 'குடி'மகன்கள் பாராக பயன்படுத்தும் அவலம் உள்ளது. ஒன்பது வயது சிறுமி தற்கொலை செய்வாரா, அவர் தீயில் கருகியது எப்படி என கண்டறிவதில் போலீசார் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இதுவரை துப்பு கிடைக்கவில்லை. மூன்று நாட்களை கடந்தும் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.ரூ.2,000 லஞ்சம் பெண் வி.ஏ.ஓ., கைதுதிருச்சி:திருச்சியில், அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்க, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.,வை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


latest tamil news


திருச்சி மாவட்டம், லால்குடி அருகே, கண்ணக்குடி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி, தனபாக்கியம் தம்பதி, அரசின் இலவச வீட்டு மனை கேட்டு, கண்ணக்குடி வி.ஏ.ஓ., மலர்க்கொடியிடம் விண்ணப்பித்தனர்.

அதற்கு, வி.ஏ.ஓ., 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டதால், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தனர். பெரியசாமி நேற்று காலை, வி.ஏ.ஓ.,விடம், 2,000 ரூபாயை லஞ்சமாக கொடுத்துள்ளார். அதை வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், மலர்க்கொடியை கைது செய்தனர்.


இந்திய நிகழ்வுகள்

நக்சல்களுக்கு துப்பாக்கி 'சப்ளை' ஜார்க்கண்ட் வாலிபர் அதிரடி கைதுவேலுார்:நக்சலைட்களுக்கு, துப்பாக்கி வாங்கி கொடுத்து, வேலுாரில் பதுங்கி இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.


latest tamil news


ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்பிரசாத் யாதவ், 54. இவர் சிறுநீரக தொற்று பிரச்னைக்காக, வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு உதவியாக அவரது மகன் வீரேந்திர குமார் யாதவ், 34, இருந்து வந்தார். இதற்காக இவர் மருத்துவமனை எதிரில் உள்ள, ஒரு விடுதியில் தங்கியிருந்தார்.

நேற்று மாலை, 3:00 மணிக்கு இவர் மருத்துவமனைக்கு நடந்து சென்றபோது, ஜார்க்கண்ட் மாநிலம் அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பபுல்குமார் தலைமையில், ஐந்து போலீசார் துப்பாக்கி முனையில் அவரை கைது செய்தனர்.

பின் வேலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். ஜார்க்கண்ட் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். பின் போலீஸ் பாதுகாப்புடன், அவரை சென்னைக்கு காரில் அழைத்து சென்று விமானத்தில் ஜார்க்கண்ட் அழைத்து சென்றனர்.

ஜார்க்கண்ட் மாநில போலீசார் கூறியதாவது: ஜார்க்கண்ட் மாநிலம், நிந்திர் லெதிஹர் பகுதியை சேர்ந்தவர் வீரேந்திர குமார் யாதவ்; பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். வேலை கிடைக்காததால், அங்குள்ள நக்சலைட்களுக்கு வெடி மருந்து, துப்பாக்கி கள்ளத்தனமாக வாங்கி கொடுத்து பிழைத்து வந்தார். பின் நக்சலைட் ஆதரவாளராக மாறி, அவர்கள் சொல்லும் வேலைகளை செய்து வந்தார். இவர் மீது, 20க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, கடத்தல், ஆயுதம் கடத்தல் வழக்குகள் உள்ளன.

12 முறை கைது செய்யப்பட்டு உள்ளார். கடந்த ஜனவரி 1ல், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த இவர் தலைமறைவானார். இதனால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். மொபைல் போனை ஆய்வு செய்ததில், அவர் வேலுாரில் இருப்பது தெரிந்தது. கடந்த இரண்டு நாட்களாக, வேலுாரில் அவரது நடமாட்டத்தை கண்காணித்து கைது செய்தோம். இவரிடம் ஒரு மொபைல் போன், ஆறு சிம்கார்டுகள், டைரி ஆகியவை கைப்பற்றப்பட்டுஉள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.நீர்ப்பாசன துறை பொறியாளர் குடும்பத்துடன் தற்கொலைதுமகூரு : நீர்ப்பாசன துறை பொறியாளர் தன் மகள், மனைவியுடன் ஹேமாவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

துமகூரில் அருகே உள்ள மரளூரை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ், 55. இவர் குப்பி பி.கே.கிராசில் உள்ள ஹேமாவதி கால்வாய் மண்டல அலுவலக உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு, நாகரஹள்ளி கேட் அருகிலுள்ள ஹேமாவதி ஆற்றில் மனைவி மமதா, 45, மகள் சுபா, 25 ஆகியோருடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மனைவி மமதா, பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். மகள் சுபாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்தான் திருமணம் நடந்திருந்தது. மூன்று பேரும் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-டிச-202107:30:04 IST Report Abuse
Bhaskaran மலர்கொடிக்கு லஞ்சம் வாங்காவிடில் தூக்கம் வராது போலிருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X