முதல்வர் வழங்கிய வீட்டுமனையில் பிரச்னை; அதிகாரிகளை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்

Updated : டிச 18, 2021 | Added : டிச 18, 2021 | கருத்துகள் (18) | |
Advertisement
மாமல்லபுரம் : மாமல்லபுரம் - பூஞ்சேரி பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள், இருளர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின், நவ., 4ல் நலத்திட்ட உதவி வழங்கினார்.நரிக்குறவர் 54 பேர், இருளர் 27 பேர் என, 81 பேருக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். வீடற்ற நரிக்குறவர் - 11, இருளர் - 11 என, 22 பேருக்கு, அரசு மானிய நிதி தலா 2.10 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்ட, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பணியாணை
MK Stalin, Welfare Aid, Narikuravar

மாமல்லபுரம் : மாமல்லபுரம் - பூஞ்சேரி பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள், இருளர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின், நவ., 4ல் நலத்திட்ட உதவி வழங்கினார்.

நரிக்குறவர் 54 பேர், இருளர் 27 பேர் என, 81 பேருக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். வீடற்ற நரிக்குறவர் - 11, இருளர் - 11 என, 22 பேருக்கு, அரசு மானிய நிதி தலா 2.10 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்ட, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பணியாணை வழங்கியது.


latest tamil news


வீடுகள் கட்டுவது குறித்து, வாரிய பொறியாளர் முருகதாஸ், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் ஆகியோர், நேற்று பயனாளிகளிடம் ஆலோசித்தனர். தன்னார்வ தொண்டு நிறுவனம், பல ஆண்டுகளுக்கு முன், நரிக்குறவருக்கு கட்டிய, தொகுப்பு வீடுகள் இடையே உள்ள, குறுகிய பகுதியில் தான் பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், அங்குதான் புதிய பயனாளிகளின் வீடுகள் கட்ட உள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயனாளிகள், சொந்தமாகவோ அல்லது கூடுதல் தொகை வழங்கி, ஒப்பந்ததாரர் மூலமாகவோ வீட்டை கட்டலாம் என, ஆலோசனையும் வழங்கினர். இதையறிந்து, வீடுகளில் வசிக்கும் நரிக்குறவர்களோ, 'தொகுப்பு வீடுகள் இடைவெளியில் குறுகிய இடத்தை, நாங்கள் பயன்படுத்துகிறோம். அங்கு புதிய வீடுகள் கட்டக்கூடாது' என, ஆவேசத்துடன் எதிர்த்தனர்.

நரிக்குறவ பயனாளிகள் கூறியதாவது: எங்களுக்கு வீடு கட்ட, முறையாக வேறிடம் ஒதுக்காமல், ஏற்கனவே உள்ள வீடுகளை ஏன் ஒதுக்குனீர்கள். வேறிடம் ஒதுக்க வேண்டும். முதல்வரே நேரடியாக வந்து பட்டா வழங்கினார் என்பதால், அனைத்தும் சரியாக இருக்கும் என நினைத்தோம். இப்படியிருக்கும் என தெரிந்திருந்தால் அப்போதே மறுத்திருப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகாரிகள், இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
18-டிச-202115:02:58 IST Report Abuse
R.RAMACHANDRAN அரசு கொடுக்கும் தொகை 2.10லட்சத்தில் ஒரு சதுர வீடுதான் கட்டமுடியும். அவர்களால் கூடுதல் தொகை செலவு செய்ய முடியாது என்பதால் கடனாளியாக விரும்பாமல் இருப்பதால் பயனாளியாக ஆக ஆர்வம் காட்டுவதில்லை.இதை அரசில் உள்ள லஞ்ச ஊழல் பேர்வழிகள் சாதகமாக பயன்படுத்தி பணக்காரர்களை லஞ்சம் பெற்றுக்கொண்டு கொண்டு பயனாளியாக ஆக்கிவிடுகின்றனர்.
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
18-டிச-202112:18:03 IST Report Abuse
அம்பி ஐயர் நிதி ஒதுக்காமலேயே ஒதுக்கியதாக செக் கொடுத்து போட்டோ ஷூட் நடத்துவது.... நரிக்குறவர்களுக்கு ஏற்கெனவே அவர்கள் இருக்கும் இடத்தையே மீண்டும் பட்டா போட்டு இடம் ஒதுக்குவது மாதிரி போட்டோ ஷூட்... சூப்பர்.... அருமை....
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
18-டிச-202111:46:40 IST Report Abuse
raja "முதல்வரே நேரடியாக வந்து பட்டா வழங்கினார் என்பதால், அனைத்தும் சரியாக இருக்கும் என நினைத்தோம். இப்படியிருக்கும் என தெரிந்திருந்தால் அப்போதே மறுத்திருப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.".... துக்ளக்கு நேரா வந்தது கொடுத்தாருன்னு சொன்னா குழப்பம் தானே வரும்...கேடுகெட்ட அரசு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X