மத மாற்றம் தடை சட்டம்; சித்தராமையா மீண்டும் புலம்பல்

Updated : டிச 18, 2021 | Added : டிச 18, 2021 | கருத்துகள் (38) | |
Advertisement
பெங்களூரு : ''அரசியல் அமைப்பு படி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அவர்கள் விரும்பும் மதத்தை கடைபிடிக்கும் உரிமை உள்ளது. இதற்கு எதிராக சட்டம் கொண்டு வருவது அரசியல் அமைப்பிற்கு புறம்பானது,'' என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கர்நாடகாவில் மதம் மாற்றம் தடை சட்டம் கொண்டு வருவதில் பா.ஜ., அரசு மும்முரமாக உள்ளது. இது தொடர்பான சட்ட
Anti Conversion Bill, Siddaramaiah, Congress, INC

பெங்களூரு : ''அரசியல் அமைப்பு படி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அவர்கள் விரும்பும் மதத்தை கடைபிடிக்கும் உரிமை உள்ளது. இதற்கு எதிராக சட்டம் கொண்டு வருவது அரசியல் அமைப்பிற்கு புறம்பானது,'' என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் மதம் மாற்றம் தடை சட்டம் கொண்டு வருவதில் பா.ஜ., அரசு மும்முரமாக உள்ளது. இது தொடர்பான சட்ட மசோதா வரும் 20 ல் சட்டசபையில் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை ஆளுங்கட்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று குறிப்பிட்டதாவது: கட்டாய மதமாற்றம் தண்டனைக்குரிய குற்றம் என்று இப்போதும் அமலில் உள்ளது. புதிதாக மற்றொரு சட்டம் எதற்காக. சிறுபான்மையினரை மிரட்டி, அவருக்கு எதிராக வேண்டுமென்றே பிரச்னை செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி, ஜாதி, மதம் பார்க்காமல் கிறிஸ்துவர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினரையும் ஆதரித்து வருகிறோம். யாருக்கும் தொந்திரவு ஏற்பட விட மாட்டோம்.


latest tamil news



அரசியல் அமைப்பு படி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அவர்கள் விரும்பும் மதத்தை கடைபிடிக்கும் உரிமை உள்ளது. இதற்கு எதிராக சட்டம் கொண்டு வருவது அரசியல் அமைப்பிற்கு புறம்பானது. கிறிஸ்துவர்கள் நடத்தும் பள்ளி, கல்லுாரி, மருத்துவமனைகளுக்கு வேறு சமுதாயத்தினரும் செல்கின்றனர். அனைவரும் மதம் மாற்றம் செய்தில்லை. யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை.

பா.ஜ., ஆட்சியில் தேவாலயம் மீது தாக்குதல் நடக்கின்றன. காங்கிரஸ் ஆட்சியில் அதற்கு வாய்ப்பு தரவில்லை. கர்நாடக அரசு கொண்டு வர முற்பட்டுள்ள மதம் மாற்றம் தடை சட்டம் கொண்டு வருவதன் பின்னணியில் மக்கள் நலன் இல்லை. நாட்டில் மத பிரச்னை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா
22-டிச-202103:44:34 IST Report Abuse
Varatharaajan Rangaswamy நேற்று வரை மாரியம்மனை வழிபாட்டு வந்த ஒருவர் இன்றிலிருந்து ஏசுவையும் வழிபடுவதை பற்றி ஹிந்துக்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், ஏசுவை வழிபட ஆரம்பித்த ஒருவர், மாரியம்மனையும் மற்ற ஹிந்து தெய்வங்களையும் பிசாசு என்று சொல்லி, ஹிந்து தெய்வங்களை இழிவு படுத்துகிறார் இதுவே நமது கலாச்சாரத்திற்கு மதம் மாற்றும் குழுக்களால் விடப்பட்டுள்ள சவால். இந்த சவாலை எதிர்கொள்ளவே மதம் மாற்ற தடை சட்டம் தேவைப்படுகிறது. ஹிந்துக்கள் 33 கோடி தேவதைகளுள் எந்த தேவதையையும் வழிபட சுதந்திரம் உள்ளது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தேவதையை ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு தலத்தில் வழிபடுவதால், வழிபாட்டு அடைப்படையில் மோதல்கள் மற்றும் சண்டை சச்சரவுகளை நமது சமுதாயத்தில் உருவாக்க நினைப்பவர்களை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது என்பதையே கர்நாடக பாரதீய ஜனதா அரசு இயற்ற முற்படும் சட்டம் பறைசாற்றுகிறது.
Rate this:
Cancel
M.S.Jayagopal - Salem,இந்தியா
18-டிச-202117:59:16 IST Report Abuse
M.S.Jayagopal இந்நாட்டில் உள்ள முஸ்லீம் தலைவர்கள் அரபு கலாச்சாரத்திற்கும் ,கிறிஸ்தவர்கள் ஐரோப்பிய கலாச்சாரத்திற்கும் விசுவாசமாக இருப்பவர்கள். இவர்களுக்கு நம் கலாச்சாரம் மற்றும் நம் தேசத்தின் மீது பற்று இல்லை.எனவே அவர்கள் பெரும்பான்மையாவது மிகவும் ஆபத்தானது.சித்தராமையாவுக்கு இது தெரியாதா?
Rate this:
Cancel
venkateswaran TL - CHENNAI,இந்தியா
18-டிச-202116:19:02 IST Report Abuse
venkateswaran TL வேற எந்த நாட்டிலும் இந்தியா போல மத மற்றம் செய்ய முடியாது சுதந்திரம் அடைந்த பிறகு எவ்வளவு இந்துக்கள் மதம் மாறி இருக்கிறார்கள் கிறிஸ்துவ முஸ்லீம் மக்கள் தொகை எவ்வளவு பெருகி இருக்கிறது என்று கணக்கை பார்க்கவும் இதே ரீதியில் சென்றால் இன்னும் கொஞ்ச நாளில் இந்துக்கள் சிறுபான்மை ஆகி விடுவோம். தமிழ் நாட்டில் இப்போவே நாம் சிறுபான்மை போல்தான் நடத்தப்படுகிறோம் இந்துக்கள் சாதி வேறுபாடின்றி ஒன்று கூட வேண்டிய நேரமிது மத மாற்ற தடை சட்டம் இந்தியா முழுவதும் வர வேண்டும். இது வரை மாறியவர்கள் தாய் மதம் திரும்ப வேண்டும் இல்லையேல் இட ஒதுக்கீடு சலுகை கிடையாது
Rate this:
Priyan Vadanad - Madurai,இந்தியா
18-டிச-202118:35:13 IST Report Abuse
Priyan Vadanadமதிப்புக்குரியவருக்கு: நமது இந்தியாவில் ஒருபோதும் இந்து மதம் மைனாரிட்டியாக முடியாது. தேவையில்லாத பயம் நமக்கு ஊட்டப்படுகிறது. இப்போது மற்ற மதத்தினர்தான் ஒருசில அமைப்புகளால் பயஉணர்வுடன் இருக்கிறார்கள்....
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
23-டிச-202123:18:24 IST Report Abuse
NicoleThomsonதிரு பிரியன் அவர்களுக்கு, ஜார்ஜு பொன்னையா கூறிய கருத்தை படித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன், இன்று கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வசவுகளை முன்வைப்பவர்கள் யார் என்று அறிவீர்களா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X