மீன் வளர்ப்பு குத்தகை விடுவதில் மாவட்ட நிர்வாகம்... தலையிடுமா?; தன்னிச்சையாக விடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு

Added : டிச 18, 2021 | கருத்துகள் (1)
Advertisement
தியாகதுருகம்-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற ஏரிகளில் தன்னிச்சையாக மீன் வளர்ப்பு குத்தகை ஏலம் விடுவதை கண்காணித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 674 ஏரிகள் உள்ளன. இதில் பரப்பளவில் பெரிதாக உள்ள 211 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும், 463 ஏரிகள் கிராம ஊராட்சிகளின்
மீன் வளர்ப்பு குத்தகை விடுவதில் மாவட்ட நிர்வாகம்... தலையிடுமா?; தன்னிச்சையாக விடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு

தியாகதுருகம்-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற ஏரிகளில் தன்னிச்சையாக மீன் வளர்ப்பு குத்தகை ஏலம் விடுவதை கண்காணித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 674 ஏரிகள் உள்ளன. இதில் பரப்பளவில் பெரிதாக உள்ள 211 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும், 463 ஏரிகள் கிராம ஊராட்சிகளின் பராமரிப்பில் உள்ளது.நீர் பிடிப்பு பகுதியில் ஆழம் அதிகம் உள்ள ஏரிகளில் மீன் வளர்ப்புக்கு குத்தகை விடுவது வழக்கம். இது அரசு அனுமதியோடு அதிகாரிகளின் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டு மீன் வளர்ப்புக்கு தனியாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால் முறைப்படி கடைபிடிக்கப்படுவதில்லை.குறைந்த தொகைக்கு ஏலம் விட்டதாக கணக்கு காட்டி விட்டு அரசுக்கு சொற்ப பணத்தை செலுத்திவிட்டு குத்தகைதாரரிடமிருந்து பெரிய தொகையை ஊரில் உள்ள முக்கிய புள்ளிகள் பகிர்ந்து கொள்வது வழக்கமாக உள்ளது.தன்னிச்சையாக மீன் குத்தகை விடுவதில் சில உள்ளாட்சி பிரதிநிதிகளும் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.மேலும் குத்தகை எடுத்தவர்கள் மீன் குஞ்சுகள் வேகமாக வளர்வதற்கு சில இடங்களில் கோழி கழிவுகளை நீரில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.தண்ணீர் குறைவாக உள்ள ஏரிகளில் மீன்கள் வளர்வதற்கு வசதியாக பாசனத்திற்கு மதகு வழியே தண்ணீர் செல்ல தடை ஏற்படுத்துகின்றனர். இதனால் ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில் ஏரிகளில் அரசு அனுமதி இன்றி தன்னிச்சையாக மீன் வளர்ப்புக்கு குத்தகை விடுவதற்கு தடை விதித்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டார். மேலும், அத்துமீறல் நடந்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.ஆனால், அதன் பின்னரும் ஏரிகளில் மீன் குத்தகை விடுவதை அதிகாரிகள் முறையாக கண்காணித்து கட்டுப்படுத்தவில்லை.இந்த ஆண்டு கனமழை பெய்து மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் முழுமையாக நிரம்பியுள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து ஏரிகளில் பல மாதங்கள் வரை தண்ணீர் வடியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது.

இதனால், பெரும்பாலான ஏரிகளில் மீன் வளர்ப்புக்கு சாதகமான சூழல் உள்ளது. இந்நிலையில் மீன் வளர்ப்பு குத்தகை விடுவதில் நடக்கும் முறைகேட்டை முற்றிலும் தடுக்க வேண்டும்.மீன் வளர்ப்புக்கு தகுதியான ஏரிகளில் அரசு அனுமதியோடு பகிரங்க பொது ஏலம் விடுவதற்கும், ஏரிகளின் மீன்பிடி பரப்பளவைப் பொறுத்து உரிய குத்தகை தொகையை நிர்ணயம் செய்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான தொகை அரசுக்கு கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-டிச-202108:37:00 IST Report Abuse
Sriram V It's managed and controlled by ruling party goons. Congies/ vck/ admk will not their mouth because anti corruption police will come to their home
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X