ஹெலிகாப்டர் சிதைந்த பாகங்கள்; கிரேன் உதவியுடன் மீட்க முடிவு

Updated : டிச 18, 2021 | Added : டிச 18, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
குன்னுார் : குன்னுாரில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில், கிரேன்களை பயன்படுத்தி சிதைந்த பாகங்களை எடுக்க ஆலோசிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், குன்னுார் காட்டேரி பூங்கா அருகே, நஞ்சப்பா சத்திரத்தில் கடந்த 8ம் தேதி ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.விபத்து நடந்த பகுதியில் ஹெலிகாப்டர் பாகங்கள் மற்றும் இதர பொருட்களை
Coonoor chopper crash, helicopter crash, coonoor,

குன்னுார் : குன்னுாரில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில், கிரேன்களை பயன்படுத்தி சிதைந்த பாகங்களை எடுக்க ஆலோசிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் காட்டேரி பூங்கா அருகே, நஞ்சப்பா சத்திரத்தில் கடந்த 8ம் தேதி ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.விபத்து நடந்த பகுதியில் ஹெலிகாப்டர் பாகங்கள் மற்றும் இதர பொருட்களை விமானப்படையினர், போலீசார் மற்றும் தடயவியல் துறையினர் சேகரித்து வருகின்றனர்.


latest tamil news


ஹெலிகாப்டர் பாகங்கள் தனித்தனியாக உடைத்து அடுக்கப்பட்டு வருகிறது. இவற்றை எடுத்து செல்ல, காட் ரோடு சீரமைப்பதற்கான ஆய்வு நடத்தப்பட்டது. திட்டம் குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் இன்ஜின்கள் உட்பட பிற பாகங்களை 'கிரேன்' உதவியுடன் மீட்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கிரேன் கொண்டு செல்ல, தேயிலை எஸ்டேட்டில் தற்காலிக சாலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
18-டிச-202112:33:35 IST Report Abuse
Fastrack கிரேன் கொண்டு செல்ல, தேயிலை எஸ்டேட்டில் தற்காலிக சாலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது ..... இல்லாட்டி காயலாங்கடையில தான் பாக்க முடியும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X