வனக் காடுகளின் நடுவில் புதிய காட்டேஜ்கள் கட்டித் தர...கோரிக்கை; அரசு நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

Added : டிச 18, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
கிள்ளை-பிச்சாவரம் வனக்காடுகளுக்கு மத்தியில் சேதமடைந்த காட்டேஜை இடித்து விட்டு, புதியதாக கட்டித்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் உலக புகழ்பெற்ற வனச் சுற்றுலா மையம் உள்ளது. இங்கு 3,000 ஏக்கர் பரப்பளவில், சதுப்பு நிலக்காடுகளுடன், இயற்கை சூழலுடன் மருத்துவ
வனக் காடுகளின் நடுவில் புதிய காட்டேஜ்கள் கட்டித் தர...கோரிக்கை; அரசு நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

கிள்ளை-பிச்சாவரம் வனக்காடுகளுக்கு மத்தியில் சேதமடைந்த காட்டேஜை இடித்து விட்டு, புதியதாக கட்டித்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் உலக புகழ்பெற்ற வனச் சுற்றுலா மையம் உள்ளது. இங்கு 3,000 ஏக்கர் பரப்பளவில், சதுப்பு நிலக்காடுகளுடன், இயற்கை சூழலுடன் மருத்துவ குணம் கொண்ட சுரபுண்ணை என்ற மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்திருப்பதால், உலகளவில் இந்த சுற்றுலா மையம் சிறப்பு வாய்ந்தது. இங்கு 20 வகை சுரப்புண்ணை தாவரங்கள், 18 வகை மூலிகை தாவரங்கள் உள்ளன. மேலும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்வாய்கள், ஒரே மாதிரியாக இருப்பது வியப்பாக இருக்கும். இதனால், பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை காலங்களில், தினமும் காலை முதலே ஆயிரக்கணக்கில், சுற்றுலா பயணிகள் குவிந்து விடுவார்கள். விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகம் காணப்படும். பிச்சாவரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இயந்திர படகுகள், துடுப்பு படகுகள் இயக்குவதால், பயணிகள் படகு சவாரி செய்து வனக்காடுகளை சுற்றி பார்த்து செல்கின்றனர்.பிச்சாவரம் என்றால் சுற்றுலா பயணிகளுக்கு பிடித்தமானது வனக்காடுகளுக்கிடையே அனைத்து வசதிகளுடன் உள்ள காட்டேஜில் தங்குவது தான். வனத் துறைக்கு சொந்தமான இடத்தில், சுற்றுலாத் துறை காட்டேஜ் கட்டி தங்கும் வசதிகளை செய்து தந்தது.

தற்போது காட்டேஜ் இல்லாததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைகின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காட்டேஜ் போதிய பராமரப்பின்றி சேதமடைந்ததால் பயன்படுத்த முடியாமல் போனது.வனத்துறைக்கும் சுற்றுலாத் துறைக்கும் போதிய ஒருங்கிணைப்பு இல்லாமல் காட்டேஜ்களை சீரமைக்கவும், புதிய காட்டேஜ் கட்டவும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இங்கு காட்டேஜ் இல்லாததால், பிச்சாவரம் வந்து காட்டேஜில் தங்கி ஓய்வு எடுக்கலாம் என்று ஆர்வத்துடன் வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. எனவே, அந்த இடத்தில் உள்ள காட்டேஜ்களை முற்றிலும் அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
18-டிச-202121:27:40 IST Report Abuse
Samathuvan Government should not accept this kind of request from public, it will lead crime as there will be only illegal activities going to to happen.
Rate this:
Cancel
சிவா - Aruvankadu,இந்தியா
18-டிச-202114:52:39 IST Report Abuse
சிவா மனிதன் நகரத்தில் இருந்தால் விலங்குகள் வனத்தில் இருக்கும். அடுத்த வர் இடத்தை புடுங்கி வாழ நினைத்தால் அதன் விளைவு தெரியாதவர் தான் இது போன்ற ஆசை படுவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X