பெண் தொழிலாளர்கள் போராட்டம்: 17 மணி நேரம் நீடித்ததால் பரபரப்பு

Updated : டிச 19, 2021 | Added : டிச 18, 2021 | கருத்துகள் (16) | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் அருகே தனியார் விடுதியில் தங்கி பணியாற்றி வந்த பெண் தொழிலாளர்கள், விடுதியில் உணவு சாப்பிட்ட பின் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலரை காணவில்லை எனக் கூறி, சக தொழிலாளர்கள் 17 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.250 பெண்கள்காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, மொபைல் போன்
foxconn, ladies, workers, womenworkers, protest, பெண்கள், போராட்டம், சென்னை , பெங்களூரு, நெடுஞ்சாலை, போராட்டம், பாதிப்பு

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் அருகே தனியார் விடுதியில் தங்கி பணியாற்றி வந்த பெண் தொழிலாளர்கள், விடுதியில் உணவு சாப்பிட்ட பின் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலரை காணவில்லை எனக் கூறி, சக தொழிலாளர்கள் 17 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


250 பெண்கள்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, மொபைல் போன் தயாரிக்கும் 'பாக்ஸ்கான்' என்ற தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு, 14 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.பெண் தொழிலாளர்கள் 3,000 பேர் பூந்தமல்லி அருகே, ஜமீன் கொரட்டூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். சில தினங்களுக்கு முன் இந்த விடுதியில் உணவருந்திய 259 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, பூந்தமல்லி, தண்டலம், திருவள்ளூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து திரும்பினர். இதில், 10க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.இதில் இரண்டு பெண் தொழிலாளர்கள் இறந்து விட்டதாக தகவல் பரவியது. இதனால், கோபமடைந்த பெண் தொழிலாளர்கள் 2,000 பேர் பணி முடிந்ததும், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரம் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.


latest tamil newsஇதனால், தேசிய நெடுஞ்சாலையில் 5 கி.மீ.,க்கு வாகனங்கள் அணிவகுந்து நின்றன. காஞ்சிபுரம் எஸ்.பி., சுதாகர் தலைமையிலான போலீசார் பேச்சு நடத்தியும், தொழிலாளர்கள் சமாதானம் அடையவில்லை.போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, சுங்குவார்சத்திரம் உள்ளே மாற்று வழியில் வாகனங்களை போலீசார் திருப்பி விட்டனர்.நேற்று காலை, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று, தொழிற்சாலை நிர்வாகத்தினருடன், ஊழியர்கள் முன்னிலையில் பேச்சு நடத்தினார். இறந்ததாக கூறப்படும் கஸ்துாரி, ஐஸ்வர்யா ஆகிய இரண்டு பெண் தொழிலாளர்களுடன், மொபைல் போனில், 'வீடியோ காலில்' பேசினார். இதையடுத்து, தொழிலாளர்கள் இறந்ததாக பரவிய தகவல் வதந்தி என உறுதி செய்யப்பட்டது.


latest tamil news
கலெக்டரின் அறிவுரையை ஏற்று, சில தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். எனினும், இதை நம்பாத சிலர், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினர்.தரமற்ற முறையில் உணவு சமைத்தவர்கள் மீதும், விடுதி வார்டன் மீதும், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, பெண் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.வயிற்றுபோக்கு

திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டம், புதுச்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லுாரி விடுதியில் தங்கி உள்ள 'பாக்ஸ்கான்' தொழிற்சாலை பணியாளர்களுக்கு, 15ம் தேதி திடீர் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டது. அன்றைய தினம், 259 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 159 பேர் மட்டும், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். 155 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது, நான்கு பேர் மட்டும் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.யாரும் இறக்கவில்லை; இறந்து விட்டதாக வதந்தி பரவி வருகிறது. இதுபோல் வதந்தி பரப்புவோர் மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news
ஒரகடத்தில் 50 பேர் கைது


பெண் தொழிலாளர்கள் இறந்ததாக தகவல் பரவியதையடுத்து நேற்று காலை பணிக்கு சென்ற மற்ற தொழிற்சாலை ஊழியர்களும் பணியை புறக்கணித்து ஒரகடம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 50 பெண் தொழிலாளர்கள் மாலை வரை கலைந்து செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை ஒரகடம் போலீசார் கைது செய்தனர்.வி.ஏ.ஓ.,வை மிரட்டிய மூவர்


சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 50; மனைவி ஹேமலதா, 45. வெள்ளவேடு அடுத்த, புதுச்சத்திரம் பகுதியில் தனியார் மெரைன் கல்லுாரி நடத்தி வருகின்றனர்.மாணவர்கள் தங்கும் விடுதியில், தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் 3,000 பெண்களை தங்க வைத்தனர். இதில் 159 பெண்கள் கடந்த 15ம் தேதி வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வி.ஏ.ஓ., மோகன், தனியார் கல்லுாரி வளாகத்தில் விசாரிக்க சென்ற போது அவரை கல்லுாரி உரிமையாளர்களான செந்தில்குமார், அவரது மனைவி ஹேமலதா மற்றும் சமையல்காரர் முனுசாமி ஆகிய மூவரும் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.வி.ஏ.ஓ., மோகன் புகாரையடுத்து, வெள்ளவேடு போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
20-டிச-202101:57:29 IST Report Abuse
Sai கலெக்டரின் வீடியோ காலைவிட ஏதோ ஒருTV நேரடி நேர்காணலை ஒளிபரப்பியிருக்கலாமே பீதியூட்டமட்டுமே இல்லாமல் புரளியை புஸ்வாணமாகாவும் ஊடகங்கள் முன்வர வேண்டும்
Rate this:
Cancel
18-டிச-202121:26:02 IST Report Abuse
அப்புசாமி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அந்த நிறுவனத்தின் பெயர் Foxconn நு போட்டிருக்கு. அது ஆப்பிள் ஐபோன்களின் முக்கிய சப்ளை நிறுவனம். இதை ஊதிப் பெருசாக்கினால் நாட்டுக்கும், தொழிலாளர்களுக்கும் நஷ்டம். ஆனாலும் விடியல் அரசும், ஒன்றிய அரசும் தொழிலாளர்களை பத்தி கவலைப் படப் போவதில்லை. இது மாதிரி நிறுவனங்கள் சீனாவிலிருந்து கொஞ்சம் வெளியேறி இங்கே வந்தவை. சீனாவின் சதியாகவும் இருக்கலாம். ஐபோனுக்கு இந்தியாவில் பெரிய மார்க்கெட் இருப்பதால், தற்போதைக்கு இழுத்து மூட மாட்டாங்க. விசாரணை நடத்தி உண்மையை கொணர வேண்டியது அரசுகளின் கடமை.
Rate this:
Cancel
18-டிச-202121:07:20 IST Report Abuse
அப்புசாமி அது எந்த நிறுவனம்னு யாராவது தெரிஞ்சா சொல்லுங்களேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X