கிணத்துக்கடவு: நிலவில் நீர் கண்டுபிடித்ததை விட, கோதவாடி குளத்தில் நீர் நிறைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது, என, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
![]()
|
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, குருநல்லிபாளையத்தில் அமைந்துள்ள, 250 ஏக்கர் பரப்பிலான கோதவாடி குளம் நிறைந்த தகவல் அறிந்து, தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் துணைத்தலைவரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை, நேற்று மாலை குளத்தை காண வந்தார். அப்போது, அவர் கூறியதாவது:
![]()
|
கடந்த 2008ல் சந்திராயனை நிலவுக்கு அனுப்பி, தேசிய கொடியை நிலை நிறுத்திவிட்டு கோதவாடி வந்தேன். நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தேன்.
அப்போது, சிலர் நிலவில் நீர் இருக்கட்டும், உள்ளூர் குளத்தில் நீர் இல்லையே என்றபோது, மனது உறுத்தியது. தற்போது, கோதவாடி குளத்துக்கு நீர் வருவதற்கு, இங்குள்ள தன்னார்வலர்கள் முயற்சி எடுத்துள்ளனர். ஊர் கூடி தேர் இழுத்தது போல இருக்கிறது.
குளத்தில் நீர் நிறைந்துள்ளதை பார்க்கும்போது ஆத்மார்த்த திருப்தி ஏற்படுகிறது. நிலவில் நீர் கண்டுபிடித்ததை விட, கோதவாடி குளத்தில் நீர் நிறைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இவ்வாறு, தெரிவித்தார்.
Advertisement