சென்னை: தமிழகம் முழுவதும் ஆபத்தான, மிக பழமை வாய்ந்த கட்டடங்கள் மற்றும் கழிவறைகளை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் உள்ள சாப்டர் பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியாகினர். இந்த சம்பவத்தால் இப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இதனையடுத்து பள்ளி தாளாளர், தலைமையாசிரியை கட்டட ஒப்பந்தகாரர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்ய பல்வேறு குழுக்களை நியமித்துள்ளது. பள்ளியில் இது போன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க மாவட்ட கலெக்டர் மற்றும் கல்விதுறை அதிகாரிகள் பள்ளிகளை ஆய்வு செய்தனர்.

இதன் அடிப்படையில் மோசமான, பலவீனமான கட்டடங்களை கண்டறியும் பணி துவங்கியது. இது போன்ற ஆய்வில் மதுரையில் 200 பள்ளிகளில் இடிக்க வேண்டிய கட்டடங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன்படி மாவட்ட கலெக்டர் அனிஷ்குமார் உத்தரவுப்படி 120 கட்டடங்கள், 80 கழிவறைகள் இடிக்க உத்தரவிட்டார்.
திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் , 146 பள்ளி கட்டடங்களை சில பகுதிகள் இடிக்க உத்தரவிட்டார்.