புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை துவக்குவது தொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகளுடன் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் ஆலோசனை நடத்தினர்.
![]()
|
புதுச்சேரி - பெங்களூருக்கு இடையே நடந்த விமான சேவையில், வரவேற்பு இல்லாததால், சேவை நிறுத்தப்பட்டது. அதன் பின்பு, மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் மீண்டும் விமான சேவை துவங்கியது.
கடந்த 2017 ம் ஆண்டு புதுச்சேரி - பெங்களூரு இடையே விமான சேவை துவங்கியது. பயணிகள் வரத்து குறைவு காரணமாக மீண்டும் விமான சேவை நிறுத்தப்பட்டது.
![]()
|
இந்நிலையில், புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை துவங்குவது தொடர்பாக, சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் மற்றும் சென்னை விமான துறை அதிகாரிகளுடன் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசனை நடத்தினர்.
எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், சம்பத், சுற்றுலா துறை இயக்குநர் பிரியதர்ஷினி, விமான நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.