வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது ஏன்? ராகுல் விளக்கம்

Updated : டிச 18, 2021 | Added : டிச 18, 2021 | கருத்துகள் (21)
Advertisement
அமேதி: ரூபாய் நோட்டு வாபஸ், தவறான முறையில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி, கோவிட் காலத்தில் மத்திய அரசின் உதவி இல்லாத காரணத்தினால் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.உ.பி., மாநிலம் அமேதியில் நடந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: கடந்த 2004 ல் அரசியலுக்கு வந்தேன். எனது முதல் தேர்தலில் அமேதியில் தான் போட்டியிட்டேன். அரசியல்
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

அமேதி: ரூபாய் நோட்டு வாபஸ், தவறான முறையில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி, கோவிட் காலத்தில் மத்திய அரசின் உதவி இல்லாத காரணத்தினால் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

உ.பி., மாநிலம் அமேதியில் நடந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: கடந்த 2004 ல் அரசியலுக்கு வந்தேன். எனது முதல் தேர்தலில் அமேதியில் தான் போட்டியிட்டேன். அரசியல் குறித்து அமேதி மக்கள் பாடம் நடத்தினர். அரசியலுக்கான பாதையை இம்மக்கள் தான் காட்டினர். இங்குள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.


latest tamil news


விவசாய சட்டங்களை கொண்டு வந்த பிரதமர், இதனால், விவசாயிகள் பலன்பெறுவார்கள் என தெரிவித்தார். ஆனால், சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஒன்று பட்டு போராடியதால், பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டியதாயிற்று. போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து கேள்வி எழுப்பிய போது, எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை எனக்கூறியுள்ளார்.


latest tamil news


இன்றைய சூழ்நிலை குறித்து உங்களுக்கு நன்கு தெரியும். வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கம் அதிகமாக உள்ளது. இது குறித்த கேள்விகளுக்கு பிரதமரும், முதல்வரும் பதிலளிக்க மாட்டார்கள். சில நாட்களுக்கு முன்னர் கங்கையில் புனித நீராடிய பிரதமர், வேலைவாய்ப்பின்மை குறித்து பேசவில்லை. பிரதமர் எடுத்த சில முடிவுகளால் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ரூபாய் நோட்டு வாபஸ், தவறான முறையில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி, கோவிட் காலத்தில் மத்திய அரசின் உதவி இல்லாத காரணத்தினால் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
binakam - chennai,இந்தியா
19-டிச-202113:23:58 IST Report Abuse
binakam போன வாரம் அமெரிக்கா முதலாளிகள் இந்திய இளைஞர்கள் டெக் கம்பெனி அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர் என சொன்னார்கள். இதை 20 வருடங்களுக்கு முன்கூட்டியே பராக் ஒபாமா அவர்கள் சொந்த நாட்டு குழைந்தைகள் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்த அறிவுத்தினர். அப்போ பிற நாடுகளில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகமா இருக்கும். எனவே இந்தியாவில் மட்டுமே இப் பிரச்னை இல்லை. எல்லா நாடுகளிலும் உள்ளதுதான். வேறு உற்ப்பிடியான காரணம் ரூம் போட்டு யோசிக்கலாமே. >>>>>>>>>>
Rate this:
Cancel
18-டிச-202121:08:54 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K முதலில் ஸ்விஸ் வங்கியில் இவர் பெயரில் எவ்வளவு பணம் உள்ளதோ, அதை வெளியே கொண்டு வந்தால் வேலை வாய்ப்புகளை பற்றி பேசலாம்.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
18-டிச-202120:45:13 IST Report Abuse
sankar "ரூபாய் நோட்டு வாபஸ், தவறான முறையில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி, கோவிட் காலத்தில் மத்திய அரசின் உதவி இல்லாத காரணத்தினால் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது"- அடேயப்பா மிகப்பெரிய கண்டுபிடிப்பு - நோபல் பரிசு நிச்சயம் - மிஸ்டர் ராகுல் இப்படி சிறுபிள்ளைத்தனமாக - லாஜிக் இல்லாமல் பேசுவது உங்களுக்கே அசிங்கமாக இல்லையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X