வாஷிங்டன்: ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மூன்று டோஸ் தடுப்பு மருந்து செலுத்த பைசர் திட்டமிட்டு வருகிறது.
பைசர் தடுப்பு மருந்து நிறுவனம் தற்போது மூன்றாவது பூஸ்டர் தோஸ் தடுப்பு மருந்தை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த திட்டமிட்டு வருகிறது. இதற்கு அமெரிக்காவின் எப்டிஏ தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதி தேவை. தற்போது உலகின் முதன் முறையாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து செலுத்த பைசர் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.அடுத்த ஆண்டுமுதல் ஆறு மாதங்களுக்கு ஐந்து வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்புமருந்து செலுத்த அவசர அனுமதி கோரியுள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்ப ஒரு தடுப்பூசியில் மூன்று மைக்ரோகிராம் தடுப்பு மருந்து மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.ஆறு மாதத் கைக்குழந்தை முதல் 6 வயது குழந்தைகள் வரை இந்த டோஸ் உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காமல் வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் என்று பைசர் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இளைஞர்களுக்கு 30 மைக்ரோகிராம் அளவு கொண்ட தடுப்பு மருந்து செலுத்தப்படும் நிலையில் இதில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே தற்போது குழந்தைகளுக்கு செலுத்தப்படுவதால் இந்த தடுப்பு மருந்து மிகவும் பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.

10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரது நோயெதிர்ப்பு சக்தியை காட்டிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. ஆகவே மூன்று மைக்ரோகிராம் அளவு கொண்ட 3 டேஸ் தடுப்பூசி குறிப்பிட்ட இடைவெளியில் செலுத்துவதன் மூலமாக வைரஸ் தாக்கத்திலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்படுவர் எனப்படுகிறது. ஆனால் பைசரின் இந்த குழந்தைகளுக்கான தடுப்பு மருந்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து தர நிர்ணய அமைப்பின் பல்வேறு சோதனைகளுக்குப் பிறகே சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE